எல்லைப் பாதுகாப்பை தீவிரப்படுத்த கைகோர்த்த அவுஸ்திரேலியா- இலங்கை

பிராந்திய எல்லைப் எல்லைப் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் விதமாக அவுஸ்திரேலியாவின் ஆதரவுடன் ‘இலங்கை எல்லை அபாய மதிப்பீட்டு மையம் (Sri Lankan Border Risk Assessment Centre (BRAC)’
கொழும்பு நகரில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த மதிப்பீட்டு மையம் இலங்கை பாதுகாப்புத்துறையின் கீழ் புதிய உளவு மையமாக செயல்பட போகிறது. இதன் மூலம் சட்டரீதியான பயணம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தவும் சட்டவிரோத பயணங்களை கண்டறிந்து தடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த மதிப்பீட்டு மையம் திறக்கப்பட்டது அவுஸ்திரேலியா- இலங்கை உறவில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க மைல்கல் என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கரென் ஆண்டூருஸ் தெரிவித்திருக்கிறார். இந்த எல்லை மேலாண்மை திட்டத்திற்காக ஆஸ்திரேலிய அரசு 5 மில்லியன் டாலர்களை நிதி வழங்கியிருக்கிறது.

Tamil News