அவுஸ்திரேலியா- வரலாற்றில் முதன் முறையாக இலங்கையைச் சேர்ந்த இரட்டையர்களுக்கு  முனைவர் பட்டம் 

1671523345 twins 6 அவுஸ்திரேலியா- வரலாற்றில் முதன் முறையாக இலங்கையைச் சேர்ந்த இரட்டையர்களுக்கு  முனைவர் பட்டம் 

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகம் அதன் 168 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக ஒரே மாதிரியான இரட்டையர்களுக்கு ஒரே நேரத்தில் முனைவர் பட்டங்களை வழங்கியுள்ளது. இலங்கையில் பிறந்து வளர்ந்து இரட்டையர்களுக்கே இந்த முனைவர் பட்டங்கள் கிடைத்துள்ளன. 

இலங்கையில் உள்ள  சிறீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை முடித்த இரட்டையர்களான நதீஷாவும் தேஜானி குணரத்னவும் கடந்த 2016 ஆம் ஆண்டு மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வை தொடங்கியிருக்கின்றனர்.

இவர்கள் இருவரும் கடந்த டிசம்பர் 17ம் தேதி, சர்வதேச இரட்டையர்கள் தினத்துக்கு ஒரு நாள் முன்னதாக முனைவர் பட்டத்தை பெற்றிருக்கின்றனர்.

சாக்லேட் நுகர்வோரின் உணர்ச்சி மற்றும் உணர்ச்சிகரமான பதில்களை அளவிடுவதற்கும் பகுப்பாய்வு செய்வதற்குமான புதிய வழிகளை ஆய்வு செய்திருக்கின்றனர். இதில் தேஜானி சாக்லேட் சுவையின் தாக்கம் தொடர்பிலும் நதீஷா பொதி செய்தல் தொடர்பான தாக்கம் குறித்தும் ஆய்வு செய்துள்ளார்.