Home உலகச் செய்திகள் அகதிகளை நியூசிலாந்தில் குடியமர்த்தும் ஒப்பந்தத்தை ஏற்றது அவுஸ்திரேலியா

அகதிகளை நியூசிலாந்தில் குடியமர்த்தும் ஒப்பந்தத்தை ஏற்றது அவுஸ்திரேலியா

ஒப்பந்தத்தை ஏற்றது அவுஸ்திரேலியா

ஒப்பந்தத்தை ஏற்றது அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்த அகதிகளை நியூசிலாந்தில் மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தத்தை இறுதியாக அவுஸ்திரேலிய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. 

சுமார் 10 ஆண்டுகளாக நிச்சயமற்ற நிலையில் சிறைப்பட்டு கிடந்த 450 அகதிகளை நியூசிலாந்தில் மீள்குடியமர்த்த ‘அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அகதிகள் ஒப்பந்தம்’ வழி வகை செய்கிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆண்டுக்கு 150 அகதிகள் என 3 ஆண்டுகளுக்கு சுமார் 450 அகதிகள் நியூசிலாந்தில் மீள்குடியமர்த்தப்படுவார்கள்.

இந்த ஒப்பந்தம் மூலம் அவுஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு மையங்களிலும் குடிவரவுத் தடுப்புகளிலும் அல்லது படகு வழியாக வந்து தற்காலிக விசாவில் காத்திருக்கும் அகதிகளும் நியூசிலாந்தில் மீள்குடியமருவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

அதே சமயம், இந்த ஒப்பந்தம் படகு வழியாக வரும் அகதிகளை கையாளும் அவுஸ்திரேலியாவின் போக்கில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கரேன் ஆண்டூருஸ் தெரிவித்திருக்கிறார்.

பெருமளவிலான பணத்தை செலவளிக்கும், உயிர்களை அழிக்கும், அகதிகள் பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பு முறையை அரிக்கும் தோல்வியுற்ற அவுஸ்திரேலிய அகதிகள் கொள்கையின் மீது போடப்பட்ட மாவுக்கட்டாக இந்த ஒப்பந்தம் இருக்கிறது என சர்வதேச அகதிகள் சட்ட நிபுணரான நட்டாஷா யாகூப் குறிப்பிட்டிருக்கிறார்.

Exit mobile version