Home செய்திகள் நாட்டை ஏலம் கோரி விற்கும் நிலைக்கு சென்றுவிட்ட அரசு: சுரேஷ்

நாட்டை ஏலம் கோரி விற்கும் நிலைக்கு சென்றுவிட்ட அரசு: சுரேஷ்

suresh 1 நாட்டை ஏலம் கோரி விற்கும் நிலைக்கு சென்றுவிட்ட அரசு: சுரேஷ்

தமிழ் மக்களையே அழித்த சிங்கள, பெளத்த மேலாதிக்க சக்திகள் இலங்கையின் இறையாண்மையைக் காப்பதற்காக தமிழ், முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை விடுகின்ற நிலையை நாங்கள் பார்க்கின்றோம். இலங்கையை ஆட்சி செய்த அரசுகள் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்த்திருப்பார் களாயின் இவ்வாறு மண்டியிட வேண்டிய அவசியம் இவர்களுக்கு ஏற்பட்டிருக்காது.

இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார். நேற்று மதியம் யாழ்.ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கை யினுடைய இறைமையைக் காப்பாற்று வதற்காக தமிழ், முஸ்லிம் மக்களை தங்களுடன் ஒன்றிணையுமாறு பெளத்த துறவிகள் கோரிக்கை விட ஆரம்பித் திருக்கிறார்கள். இவர்கள் தான் இப்போது இருக்கக் கூடிய அரசைப் பதவிக்கு கொண்டு வந்து முன்னணியில் நின்று அதற்கான வேலைகளை நடத்தியவர்கள். இப்போது இந்த அரசு இந்த நாட்டையே ஏலம் கோரி விற்கும் நிலைக்கு போய் விட்டது என்பதும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பிரதேசங்கள் சீனர்களின் பல்வேறு பட்ட தேவை களுக்காக கொடுக்கப் படுகின்றது.

ஒரு பக்கம் மீன்பிடி மறு பக்கம் தென்னந் தோட்டங்கள், மாற்று மின்சாரத் திட்டங்களை கொண்டு வருவதற்கான முயற்சிகள். இப்படி பல்வேறு பட்ட தேவைகளுக்காக நிலங்களும் தொழில்களும் சீனர்கள் வசம் போகின்றன. அது மட்டு மல்ல வடக்கில் இருக்கக் கூடிய முக்கியமான காணிகளும் சீனர்களிடம் போக உள்ளதாக பேச்சுகள் அடிபடுகின்றன.”

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

Exit mobile version