பொது உடன்பாட்டுக்கான முயற்சி தோல்வி; தமிழ்க் கட்சிகளின் சார்பில் ஐ.நா.வுக்கு 4 அறிக்கைகள்

உடன்பாட்டுக்கான முயற்சி தோல்விஉடன்பாட்டுக்கான முயற்சி தோல்வி: ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் அடுத்த வாரம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழ்க் கட்சிகளின் சார்பில் 4 அறிக்கைகள் தனித் தனியாக மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட விருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.நா.வுக்கு அனுப்பப்படும் கடிதத்தில் பொது உடன்பாடு ஒன்றை ஏற்படுத்துவதற்காக கடந்த சில வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையிலேயே இவ்வாறு நான்கு அணிகள் தனித்தனியாக அறிக்கைகளை அனுப்பும் நிலை ஏற்பட்டது என தமிழ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐந்து தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ள அறிக்கை ஒன்று நேற்றைய தினம் பேரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டடுள்ளது. இதில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவும் கையொப்பிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இறுதியில் அவரது கையொப்பம் பெறப்படாத நிலையிலேயே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டது.

அதேவேளையில், தமிழரசுக் கட்சி தனியான கடிதம் ஒன்றை அனுப்பிவைக்கவுள்ள அதேவேளையில், அதிலுள்ள சில விடயங்களில் உடன்படமுடியாது எனத் தெரிவித்துள்ள மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் தனியான கடிதம் ஒன்றை அனுப்புவதற்குத் திட்டமிடுகின்றார்கள். இதனைவிட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனியான கடிதம் ஒன்றை அனுப்பிவைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021