Home செய்திகள் ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதல்கள் பாரியதொரு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன -ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதல்கள் பாரியதொரு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன -ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

பாரியதொரு ஆபத்து

ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதல்கள் பாரியதொரு ஆபத்து -ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்: ஐ.நா மனித உரிமை பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமாகிய நிலையில் முதலாவது அமர்வில் உரையாற்றிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பச்லெட் உலகுக்கு பலமான துாரநோக்குள்ள ஒரு தலைமைத்துவம் தேவைப்படுவதாக கூறியுள்ளார்.

ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதல்கள்  பாரியதொரு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை 102 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இதில் 7 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்,யுத்தம் காரணமாக பலர் கொல்லப்பட்டுள்ளனர். முக்கியமாக வெடிகுண்டு தாக்குதல்களை எதிர்த்து தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இது வரையில் 4 இலட்சத்து 22 ஆயிரம் பேர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என்றார். மேலும் உலக நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பாகவும் தற்போதைய போக்கு தொடர்பாகவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கை தொடர்பான விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெற இருக்கின்றது. இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சர்  ஜி.எல்.பீரிஸ் இந்த பொது விவாதத்தில் பங்கேற்று இலங்கை தொடர்பாக உரையாற்றுவார். இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோர் ஜெனிவாவுக்கு சென்றிருக்கின்றார். அந்த வகையில் இன்றைய தினம் அமைச்சர் பீரிஸ் உரையாற்ற உள்ளதுடன் 3ம் திகதி இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறுகிறது. இதன்போது .நா மனித உரிமைகள் ஆணையாளர் தனது இலங்கை குறித்த அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்வார்.

Exit mobile version