ரஷ்ய எண்ணெய் கிடங்கின் மீது தாக்குதல்- அமைதிப் பேச்சுவார்த்தையைப் பாதிக்கும்

ரஷ்ய எண்ணெய் கிடங்கின் மீது தாக்குதல்

ரஷ்ய எண்ணெய் கிடங்கின் மீது தாக்குதல் நடத்தியது அமைதி பேச்சுவார்த்தையை பாதிக்கும் என, ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

தங்கள் நகரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கை  உக்ரைனிய  இராணுவ வானூர்திகள் தாக்கியதாக, ரஷ்யாவின் பெல்கோரோட் நகர ஆளுநர் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், இந்த தாக்குதலை உக்ரைன் தான் நடத்தியதாக  பொறுப் பேற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில், இத்தாக்குதல் தொடர்பாக, ரஷ்ய அதிபர் மாளிகை, எண்ணெய் கிடங்கில் நடைபெற்ற தாக்குதல் அமைதி பேச்சுவார்த்தை தொடர்வதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்காது என கூறியுள்ளதாக, ரொய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ரஷ்ய செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இத்தாக்குதல் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் விநியோகத்தை மீண்டும் ஒருங்கமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருதாகவும் அவர் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.