Edward Snowdenக்கு அடைக்கலம் கொடுத்த விவகாரம்: இலங்கை அகதியை அடித்த காவல்துறை, மீட்கப் போராடிய வழக்கறிஞர்

Edward Snowdenக்கு அடைக்கலம்

அமெரிக்காவை சேர்ந்த Edward Snowden என்பவர் அந்நாட்டு உளவுத்துறை இரகசியங்களை வெளியிட்டதால் சர்வதேச அளவில் தேடப்படுகிறார். இவருக்கு மனித உரிமைகள் வழக்கறிஞர் Robert அடைக்கலம் கொடுக்க முடிவு செய்தார். ஆனால், அது ஹாங்காங்கில் அமைந்துள்ள அகதிகள் வாழும் பகுதி, அங்குதான் பிலிப்பைன்சை சேர்ந்த அகதி குடும்பம் ஒன்றும் இலங்கை அகதிகள் சிலரும் வசிக்கின்றனர்.

அங்குள்ள அகதிகளின் உதவியை Robert நாடியபோது, அவர்கள் தங்களில் ஒருவராக கருதி Edward-க்கு அடைக்கலம் கொடுக்க முன் வந்தது பெரும் சிக்கலாக முடிந்தது. ஏனென்றால், Edward Snowdenக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக விசாரணை நடத்திய ஹாங்காங் அதிகாரிகள், அவர்களுக்கு கொடுத்து வந்த சிறிய உதவி தொகையையும் நிறுத்தினர்.

அதோடு, அகதிகளை துன்புறுத்தி, அவமானப்படுத்தி, புகலிட கோரிக்கை நிராகரித்ததோடு வேலை செய்யும் உரிமையையும் மறுத்தனர். பின்னர் Robert-இன் முயற்சியால், அவர்கள் கனடாவின் உதவியை நாடினர். அதன்படி, கனடா கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபரில் Vanessa மற்றும் அவரது மகளை அகதிகளாக ஏற்றுக்கொண்டது. இதன் பிறகு, சென்ற மாதம் Supun, Nadeeka மற்றும் அவரது பிள்ளைகள் கனடாவுக்கு குடியேறினர்.

இந்த நிலையில், Edward கூடவே இருக்கும் Ajith Pushpa Kumara சந்தைக்கு சென்றபோது பிடித்த காவல்துறை போலி ஆவணங்கள் வைத்துள்ளதாக கூறி 15 நிமிடங்கள் அடித்து உதைத்தனர். தற்போது, உலகமெங்கும் தேடப்படும் Edward-இன் ரஷ்யாவில் எடுத்த வெளியாகாத சில புகைப்படங்களை ஏலம் விட்டு அந்த பணம் மூலம் அகதிகளை மீட்க இருக்கிறார் Robert.

நன்றி-செய்தி சோலை ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad Edward Snowdenக்கு அடைக்கலம் கொடுத்த விவகாரம்: இலங்கை அகதியை அடித்த காவல்துறை, மீட்கப் போராடிய வழக்கறிஞர்