கார்த்திகைத் தீபத் திருநாளில் ஆறுமுக நாவலர் திருவுருவச்சிலை திறந்து வைப்பு

ஆறுமுக நாவலர் திருவுருவச்சிலை திறந்து

சைவத் தமிழ் ஆர்வலர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பினைப் பூர்த்தியாக்கும் வகையில் நாவலர் கலாசார மண்டபத்தில் கார்த்திகைத் தீபத் திருநாளில் சீர்வளர்சீர் ஆறுமுக நாவலர் பெருமான் திருவுருவச்சிலை   திறந்து வைக்கப்பட்டது

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள நாலவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் யாழ் மாநகர சபையின் உறுதுணையுடன் அகில இலங்கை சைவ மகா சபையால் நிறுவப்பட்ட சைவத்தமிழ் மறுமலர்ச்சி தந்தை சீர்வளர்சீர் ஆறுமுக நாவலர் பெருமானின் திருவுருவச் சிலையை யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

சைவநெறி தழைத்தோங்கவும், தமிழ் மொழி செழித்து வளரவும் பெரும் பணியாற்றிய நாவலர் வாழ்ந்த மண்ணில் கட்டப்பட்ட நாவலர் கலாசார மண்டபத்தில் நாவலர் பெருமானின் சிலை இல்லை என்ற ஏக்கம் அனைவரிடத்திலும் இருந்து வந்தது. அந்த ஏக்கம் இன்றுடன் பூர்த்தியாக்கப்பட்டது. அத்துடன் மண்டபத்தின் தற்போதைய நிலை அதன் பராமரிப்பு தொடர்பில் பலராலும் பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன அத்தனையும் ஏற்றுக்கொள்ளகூடிய உண்மைகள்.

அவை ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைகள் என்பதற்காக வேறொரு தரப்பிடம் அதனை கையளித்து பின்வாங்கி விட முடியாது. ஒரு மண்டபத்தினை வைத்து பராமரிக்க முடியாத எம்மால் எவ்வாறு ஒரு மாநகரத்தை பராமரிக்க முடியும் என்ற மாநகரசபையின் ஆளுமை தொடர்பான கேள்வி எழுவது இயல்பானதொன்றே. அந்த வகையில் மாநகர முதல்வர் எடுத்த முயற்சியின் காரணமாக நாவலர் கலாசார மண்டபத்தில் பல்வேறு மாற்றங்கள் உருவாகும். அதன் புனிதம் அதன் மகத்துவம் பேணிப் பாதுகாக்கப்படும்.

சைவத்தமிழ் மறுமலர்ச்சி தந்தை சீர்வளர்சீர் ஆறுமுக நாவலர் திருவுருவச்சிலை திறந்து வைக்கப்பட்ட நாளிலில் இருந்து அவரது மண்டபத்திலும் மறுமலர்ச்சிகள் உருவாகும். அந்தவகையில் இன்று கார்த்திகை விளக்கீடு நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

சிவசிற்ப வாரிதி உ.கயேந்திரன் அவர்களினால் வடிவமைக்கப்பட்ட இச் சிலையானது நாவலர் கலாசார மண்டபம்போல் கலைநயத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கின்றது.

வரதராஜன் பார்த்திபன்

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad கார்த்திகைத் தீபத் திருநாளில் ஆறுமுக நாவலர் திருவுருவச்சிலை திறந்து வைப்பு