பிரித்தானியாவில் எரிபொருள் நெருக்கடியைச் சமாளிப்பதற்கு இராணுவம்

பிரித்தானியாவில் எரிபொருள் நெருக்கடி

பிரித்தானியாவில் எரிபொருள் நெருக்கடியைச் சமாளிப்பதற்கு இராணுவத்தை களமிறக்கியுள்ளார் பிரதமர் பொரிஸ் ஜோன்சன்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதைத் தொடர்ந்து பிரித்தானியாவில் தொழில் செய்துவந்த ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பலர் தமது நாடுகளுக்கு திரும்பியது மற்றும் கோவிட் நெருக்கடிகளினால் கனரக வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு பிரித்தானியாவில் கடும் பற்றாக்குறை நிலவுகின்றது.

 

இதன் எதிரொலியாக எரிபொருள் வினியோகம் கடுமையாக பாதிப்படைந்துள்ளதால், மக்கள் தமது வாகனங்களுக்கு எரிபொருள் பெறுவதற்கு நீண்ட வரிசையில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெருளமவான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், எரிபொருட்களும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் தற்போது 200 இராணுவத்தினரை பிரித்தானியா அரசு விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளது. அவர்களில் 100 பேர் கனரக வாகனங்களை செலுத்தும் சாரதிகள் ஆகும். அவர்கள் தமது பணிகளை நாளை (04) ஆரம்பிக்கவுள்ளனர். மேலும் அவசரமாக 300 வெளிநாட்டு சாரதிகளும் பிரித்தானியாவுக்கு வரவுள்ளதாக பிரித்தானியா அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

ilakku-weekly-epaper-150-october-03-2021