Home செய்திகள் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் அரசியல் பிரமுகர்களின் அலுவலகங்களுக்கு முன்னால் இராணுவம் குவிப்பு

யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் அரசியல் பிரமுகர்களின் அலுவலகங்களுக்கு முன்னால் இராணுவம் குவிப்பு

அலுவலகங்களுக்கு முன்னால் இராணுவம் குவிப்பு

அலுவலகங்களுக்கு முன்னால் இராணுவம் குவிப்பு

யாழ் மாவட்டத்திலுள்ள அரசியல் பிரமுகர்களான அங்கஜன் ராமநாதன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரது அலுவலகங்களுக்கு  பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மையினை அடுத்து அரசியல் பிரமுகர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான விடுதிகள் போராட்டக்காரர்களினால் தீயிட்டு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  இன்றும் அந்த பதற்றநிலை காணப்படும் பட்சத்தில் யாழிலுள்ள அங்கஜன் ராமநாதன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரது அலுவலகங்களைச் சூழ  காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இரண்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட அரச ஆதரவு அரசியல்வாதிகளில் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர் உட்பட பல பகுதிகளில் காவல்துறையினர் வீதி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதுடன் மாவட்டம் முற்றாக செயழிலந்த நிலையில் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோரின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மட்டக்களப்பு செங்கலடி சந்தியில் முன்னெடுக்கப்படும் கோட்டா கோம் கிராமத்தில் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருவதை காணமுடிகின்றது.

குறித்த பகுதியில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்த போராட்டத்தில் பங்கெடுத்துவருவதுடன் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்துவருகின்றனர்.

Exit mobile version