Home செய்திகள் 2009ம் ஆண்டு யுத்த நேரத்தில் காணாமல் போன 1,46700  தமிழர்களும் மரணித்துவிட்டனரா? சபையில் கலையரசன் கேள்வி

2009ம் ஆண்டு யுத்த நேரத்தில் காணாமல் போன 1,46700  தமிழர்களும் மரணித்துவிட்டனரா? சபையில் கலையரசன் கேள்வி

காணாமல் போன 146700 தமிழர்களும் மரணித்து விட்டனரா

“2009ம் ஆண்டு  நடைபெற்ற யுத்தத்திலே 146700 பேர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். யுத்த நேரத்தில் காணாமல் போன 146700 தமிழர்களும் மரணித்து விட்டனரா? எமது உறவுகளின் போராட்டம், இந்த நாட்டில் நிலையான சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும். சர்வதேசம் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு எமக்குக் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இடம்பெற்றது. 70 வருடமாக எமது இனம் சந்தித்த இழப்புகளும் பாதிப்புகளும் எந்த அரசாங்கத்தினாலும் ஈடு செய்யப்பட முடியாதவையாகும்.

காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் மரணச் சான்றிதழ் வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதன் பின்னணி என்ன? இந்த நாட்டில் காணாமல் ஆக்கப்பட்ட அனைவரும் மரணித்து விட்டார்களா என்ற கேள்வி எழுகின்றது. அவ்வாறாயின், நியாயபூர்வமான தீர்வு இந்த மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். நாங்களும் இந்த நாட்டின் பிரஜைகளாக ஏனைய சமூகத்தைப் போன்று சம உரிமையுடன் வாழ வேண்டும் என்று நினைக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version