அமைச்சர் பீரிஸை சந்திப்பதற்கு பேராயர் மல்கம் ரஞ்சித் மறுப்பு

பீரிஸை சந்திப்பதற்கு பேராயர் மல்கம் ரஞ்சித் மறுப்புபீரிஸை சந்திப்பதற்கு பேராயர் மல்கம் ரஞ்சித் மறுப்பு: வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை சந்திப்பதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், அவ்வாறான சந்திப்புக்கு இரண்டு விடயங்களை முன் நிபந்தனையாக முன்வைத்திருக்கின்றார்.

உயிர்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் தொடர்பில் பல்வேறு குற்றச் சாட்டுக்களை பேராயர் முன்வைத்து வருகின்றார். இந்த நிலையில், அவரை நேரில் சந்தித்து விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளிப்பதற்கு அமைச்சர் பீரிஸ் திட்டமிட்டிருந்தார்.

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து இதுபற்றி கலந்துரையா டுவதற்கு சந்திப்பிற்கான கோரிக்கையை அவரிடம் முன்வைத்திருக்கின்றேன். ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் அரசாங்கம் எடுத்த அனைத்து நடவடிக்கை பற்றி தெளிவு படுத்தவே இந்த சந்திப்பிற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளேன்” என நேற்று முன்தினம் அமைச்சர் பீரிஸ் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

பீரிஸை சந்திப்பதற்கு பேராயர் மல்கம் ரஞ்சித் மறுப்புஇது தொடர்பில் எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை அமைச்சர் பீரிஸ் முன்வைத்திருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள கர்தினால், சில நிபந்தனைகள் நிறைவேற்றப் பட்டால் மட்டுமே அமைச்சர் பீரிஸை சந்திக்க முடியும் எனத் தெரிவித்திருக்கின்றார். அதுவரையில், சந்திப்புக்கு இடமில்லை என பேராயர் தரப்பு திட்ட வட்டமாகத் தெரிவித்துவிட்டது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகள் மக்களுடைய நம்பிக்கையைப் பெற்றுக் கொள்ளத்தக்க வகையில் நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் பீரிஸுக்கு அனுப்பி வைத்துள்ள பதிலில் பேராயர் தெரிவித்துள்ளார். அதே வேளையில், பொது மக்களினதும், கத்தோலிக்க மக்களுடையதும் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வதற்காக ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக் குழுவின் இறுதிப் பரிந்துரைகளை அரசாங்கம் நடை முறைப்படுத்த வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தி யுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து பொலிஸ் மா அதிபர் அண்மையில் தெரிவித்த தகவல்கள் விசாரணைகள் குறித்து நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இல்லை. அதனால்தான் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய செயற்பாடுகளை அரசாங்கம் செயற்படுத்திய பின்னரே அமைச்சர் பீரிஸை சந்திப்பதற்கு பேராயர் இணக்கம் தெரிவிப்பார் எனவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021