Home செய்திகள் பயங்கரவாத தடைச்சட்டம் எந்தவித காரணங்களும் கூறாமல் அகற்றப்பட வேண்டும் -கோவிந்தன் கருணாகரம்

பயங்கரவாத தடைச்சட்டம் எந்தவித காரணங்களும் கூறாமல் அகற்றப்பட வேண்டும் -கோவிந்தன் கருணாகரம்

பயங்கரவாத தடைச்சட்டம் எந்தவித காரணங்களும் கூறாமல்

‘தமிழ் பேசும் மக்களை பொறுத்தமட்டில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் எந்தவித காரணங்களும் கூறாமல் அகற்றப்படவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்’ என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்த்துள்ளார்.

தமிழரசு கட்சி வடக்கு கிழக்கு வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் ‘‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும் முன்னெடுத்துவரும் கையெழுத்துப்போராட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பயங்கரவாத தடைச்சட்டமானது தமிழர்களை அடக்கி ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு சட்டமாகும். 1979ஆம் ஆண்டு பாராளுமன்றத்திலே தற்காலிகமாக பயங்கரவாத தடைச்சட்டமானது கொண்டுவரப்பட்டாலும்   1977ஆம் ஆண்டு தேர்தலிலே தமிழீழத்திற்கான ஆணையைக் கேட்டு வென்று பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்; மக்கள் பிரதிநிதிகள்கூட இந்தச் சட்டத்தை எதிர்த்து வாக்களிக்கவில்லை என்ற விமர்சனம் தற்போதும் இருந்துகொண்டிருக்கின்றது.

அந்த வகையில் நாங்கள் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டுமென்று போராடுவது இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் இருக்கக்கூடாது. சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக கணிக்கப்பட்டுக்கொண்டு வந்தார்கள்.

எமது தலைவர்கள் அகிம்சைப் போராட்டம் நடத்தி அடிஉதை பட்டார்கள். எமது இளைஞர்கள் வீறுகொண்டு எழுந்த நேரம் அவர்களை அடக்கி ஒடுக்கலாம் என்ற நோக்கத்தில் கொண்வரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டமானது இன்றும் இந்த நாட்டிலே இருந்துகொண்டிருக்கின்றது.
ஒருகாலத்தில் தமிழ் மக்கள் மாத்திரம் தான் பயங்கரவாத தடைச்சட்டத்தினால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் கடந்த சில வருடங்களாக குறிப்பாக ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்பு பெரும்பாலான முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். எமது நாட்டில்  எண்ணிக்கையின் அடிப்படையில் சிறுபான்மையினராக இருக்கும் எம்மை அடக்கி ஒடுக்கும் ஒரு சட்டமாகவே நான் இதனை பார்க்கின்றேன்.

அந்த வகையில் இந்தச் சட்டமானது இந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும். நாங்கள் மாத்திரமல்ல ஐரோப்பிய ஒன்றியம் ஏகமனதாக இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்  அதாவது இன்னொரு இனத்தை அடக்கி ஒடுக்கும் சட்டமாக இது இருக்கக்கூடாது கண்டிப்பாக உத்தரவிட்டிருக்கின்றது என்றும் கூறலாம். ஏனென்றால் இலங்கைக்குக் கிடைக்கும் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை நாங்கள் மீள்பரிசீலணை செய்வோம் என்று கூறியிருக்கின்றார்கள்.  ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இல்லாமல் போனால் இலங்கையின் பொருளாதாரம் மிகமோசமான நிலைக்குச் செல்லும் என்பது இந்த அரசுக்குத் தெரியும்.

அந்த வகையில் இந்த அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைப்பதற்காக அதாவது சிறுசிறு மாற்றங்களை கொண்டுவருவதற்காக முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கின்றது. தமிழ் பேசும் மக்களை பொறுத்தமட்டில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் எந்தவித காரணங்களும் கூறாமல் அகற்றப்படவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்” என்றார்.

Exit mobile version