Home செய்திகள் அரசுக்கு  எதிரான  போராட்டம்- கொழும்பு நோக்கி பயணிக்கும் போராட்டக்காரர்கள்

அரசுக்கு  எதிரான  போராட்டம்- கொழும்பு நோக்கி பயணிக்கும் போராட்டக்காரர்கள்

இன்றைய தினம் நடத்தப்படவுள்ள அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு  மக்கள் பெருமளவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியை அடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலில் இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட தன்னெழுச்சி போராட்டத்திற்கு இன்றுடன் 3 மாதங்கள் நிறைவடைகின்றமையை முன்னிட்டும், மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குல்கள் மேற்கொள்ளப்பட்டு இரு மாதங்கள் நிறைவடைந்தும் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு “கோட்டா – ரணில் அரசாங்கத்தை பதவி விலகச் செய்வோம்“ என்ற தொனிப்பொருளில் இன்றைய தினம் கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது

பயணிகள் புகையிரத சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு | Important Notice About Passenger Train Service

அத்தோடு இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புக்களும், மதத் தலைவர்களும் வெவ்வேறு பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த போராட்டத்தில்  பங்கு பற்றுவதற்காகா மக்கள் கொழும்பு நோக்கி அனைத்து பகுதிகளிலும் இருந்தும் பயணத்தை தொடங்கியுள்ளனர்.

இருந்தும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அங்கு செல்ல முடியாத நிலையில் பலர் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதனால் கிடைக்கும் வாகனங்களின் கூரைகளில் உட்பட மக்கள் ஏறி பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 40 அடி கன்டெய்னர் வாகனத்தினுள் மக்கள் குழுவொன்று ஆர்ப்பாட்ட பகுதியை நோக்கி செல்லும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இன்றைய எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்கவென கண்டி மாவட்டம் உட்பட வெவ்வேறு பிரதேசங்களிலிருந்து கொழும்பு நோக்கி புகையிரதத்தில் வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள்.

காலி இரயில்வே நிலையத்தில் இன்று காலையில் கூடிய பெருமளவான மக்களின் எதிர்ப்பை அடுத்து கொழும்புக்கான புகையிரதத்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்கள் இன்று களனியிலிருந்து கொழும்பு வரை எதிர்ப்பு பேரணி ஒன்றை நடத்தினர்.இதன்போது பொலிஸாரால் கண்ணீர்புகை, நீர் தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version