இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மற்றொரு தீர்மானம்; இணை அனுசரணை நாடுகள் திட்டம்

UNHRC in Geneva இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மற்றொரு தீர்மானம்; இணை அனுசரணை நாடுகள் திட்டம்எதிர்வரும் செப்ரெம்பரில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 48 ஆவது அமர்வில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு கடுமையான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப் படுவதாகத் தெரிய வருகின்றது.

இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கும் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு பிரிட்டன் உட்பட ஐந்து நாடுகள் தயாராகி வருகின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன், மசிடோனியா, கனடா, ஜேர்மனி மற்றும் மொண்டினீக்ரோ ஆகியவை இணைந்து கூட்டாக இந்த தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான முன்னெடுப்புக்கள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 48 ஆவது அமர்வு எதிர்வரும் செப்ரெம்பர் 13ஆம் திகதி முதல் ஒக்ரோபர் 8 ஆம் திகதிவரை ஜெனிவாவில் இடம் பெறவுள்ளது. இதன் போதே இந்தப் புதிய தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு ஐந்து நாடுகள் திட்டமிட்டுள்ளன என தெரியவருகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சீனா சமர்ப்பித்த பிரிட்டிஷ் எதிர்ப்பு தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கை வாக்களித்தமையே இந்தப் புதிய தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான காரணம் என்று தெரிவிக்கப் படுகிறது

ilakku-weekly-epaper-140-july-25-2021