ஆப்கானிஸ்தானின் மேலும் ஒரு பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

taliban media killed 05 ஆப்கானிஸ்தானின் மேலும் ஒரு பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானின் அரசு ஊடக மையத் தலைவர்  சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என தலிபான் இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.

ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருகின்றன. மேலும் வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள்ளாக ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்கப் படைகளும் வெளியேறும் என்று ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான எல்லைப்புறப் பகுதிகளை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதன் காரணமாக ஆப்கன் – தலிபான்கள் இடையே கடுமையான  மோதல்கள் நடந்து வருகின்றது.  இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

அதே நேரம் உலகளவில்  ஆப்கானிஸ்தான் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான தேசமாக  மாறி வருகின்ற நிலையில், அண்மையில், ஆப்கானிஸ்தானில் தலிபான் – பாதுகாப்புப் படைகள் இடையே நடந்த சண்டையில் இந்தியப் புகைப்படப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் (ரொய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்) உயிரிழந்திருந்தார்.

தற்போது, ஆப்கானிஸ்தானில் அரசு ஊடக மையத்தின் இயக்குநராக இருந்து வந்தவர் தவா கான் மேனாபால், தலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

 இது தொடர்பாக தலிபான் தீவிரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித் கூறுகையில், “மேனாபாலை நாங்கள் தான் சுட்டுக் கொன்றோம். அவர் எங்களுக்கு எதிராக அரசு வெளியிடும் செய்திகளை ஊடகங்களுக்குக் கொண்டு சேர்த்தார். அவருடைய செய்கைக்காக அவரை தண்டித்துள்ளோம்” என்று  கூறியுள்ளார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021