Tamil News
Home உலகச் செய்திகள் அவுஸ்திரேலியா சென்ற மற்றுமொரு படகும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டது

அவுஸ்திரேலியா சென்ற மற்றுமொரு படகும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டது

கடந்த மே 21ம் திகதி இலங்கையிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றவர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், தற்போது மற்றுமொரு படகில் சென்றவர்களும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இருபது முதல் முப்பது வயதிற்கு இடைப்பட்ட சுமார் 15 ஆண்களை ஏற்றிக்கொண்டு  சென்ற  படகின் இயந்திரம் இடைவழியில் பழுதடைந்து விட்டதாகவும், உடனடியாக எவ்விடத்திற்கு சென்ற எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவர்களை மீட்டு கிறிஸ்துமஸ் தீவிற்கு கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து குறித்த படகிலிருந்த அனைவரையும் அழைத்துக்கொண்டு, அவுஸ்திரேலிய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மேலும் 30 பேர், தனிவிமானம் மூலம் இலங்கைக்குச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

படகு வழியாக வருபவர்களை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டிலேயே புதிதாக ஆட்சி வந்துள்ள அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் இருந்து வருகிறது. இந்த கொள்கையின் அடிப்படையிலேயே அவுஸ்திரேலியாவில் தஞ்சமடையும் இலங்கை அகதிகள் தொடர்ந்து நாடுகடத்தப்பட்டு வருகின்றனர்.

முன்னதாக, கடந்த ஜூன் 9ம் தேதி அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 45 தஞ்சக்கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். இப்படகு எப்போது அவுஸ்திரேலியா கடல் பகுதிக்குள் நுழைந்தது என்பது தெரியவில்லை. ஆனால், இவர்களின் படகு இடைமறிக்கப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியாவின் எல்லைகள் இறைமை நடவடிக்கையின் படகில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் வைக்கப்பட்டிருந்தனர் எனக் கூறப்படுகிறது.

அதே போல், இப்பொழுது அவுஸ்திரேலிய கடல் பகுதிக்குள் 15 தஞ்சக்கோரிக்கையாளர்களுடன் வந்த மற்றொரு படகும் அவுஸ்திரேலிய எல்லைப்படையால் தடுத்து நிறுத்தப்பட்டு, அதிலிருந்தவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல், இப்பொழுது அவுஸ்திரேலிய கடல் பகுதிக்குள் 15 தஞ்சக்கோரிக்கையாளர்களுடன் வந்த மற்றொரு படகும் அவுஸ்திரேலிய எல்லைப்படையால் தடுத்து நிறுத்தப்பட்டு, அதிலிருந்தவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version