இலங்கையில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளோரின் தொகை அதிகரிப்பு

இலங்கையில் தனிநபர் ஒருவரின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்காக செலவுசெய்ய வேண்டிய பணத்தொகைப் பெறுமதி திடீரென அதிகரித்துள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையொன்றில், ஆளொருவரின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்காக குறைந்தபட்சம் 12,444 ரூபாயை கடந்த ஜுன் மாதத்தில் செலவு செய்ய வேண்டியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளோரின் தொகையும் கூடியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக 80 ரூபாய்க்குள் கிடைத்த ஒரு கிலோ அரிசியின் தற்போதை விலை 220 ரூபாய். ஒரு கிலோ பால்மா பெட்டியின் முந்தைய விலை 950 ரூபாய், தற்போதைய விலை 2895 ரூபாய்.

கோழிமுட்டையொன்று தற்போது 65 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில காலங்களுக்கு முன்னர் 10 ரூபாய்க்கு ஒரு முட்டை கிடைத்தது. 50 ரூபாய்க்குக் கிடைத்த அப்பிள் ஒன்று 250 ரூபாய்க்கும் மேல் விற்கப்படுகிறது. இதனால் மக்களின் வாழ்க்கைச் செலவு பல மடங்காக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக குழந்தைகள் ஆரோக்கியத்தை இழக்கும் சூழ் நிலை உருவாகியுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.