சிரியாவில் இருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் – ஈரான்

சிரியாவின் கிழக்கு பகுதியான ஈபூபிரேற்ஸ் பகுதியில் இருந்து அமெரிக்க படையினர் வெளியேறவேண்டும், அங்கு அவர்கள் இருப்பதற்கு எந்தவிதமான காரணங்களுமில்லை என ஈரானின் அதிபர் இப்ராஹிம் றெஸ்சி  தெரிவித்துள்ளார்.

ரஸ்ய பிரதமர்  Vladimir Putin மற்றும் துருக்கியின் அதிபர் ரிசெப் ரையீப் ஏர்டோகன் ஆகியோர் ஈரானுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஈரானின் அதிபர் இவ்வாறு தொவித்துள்ளார்.

சிரியாவின் இறைமை மற்றும் அதன் எல்லைகள் தொடர்பில் மூன்று நாடுகளுக்கும் சில கடமைகள் உண்டு. அமெரிக்க படையினர் சிரியாவின் கிழக்கு பகுதியில் தங்கியிருப்பதற்கான காரணங்கள் இல்லை. அவர்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேற வேண்டும். சிரியாவின் பொருளாதார மற்றும் அத்தியாவசிய பொருட்களின் நெருக்கடியை தீர்ப்பதற்கு அனைத்துலக சமூகம் மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வெளியாரின் தலையீடுகள் இன்றி சிரியாவின் பிரச்சனைகள் பேசித் தீர்க்கப்பட வேண்டும், சிரியாவின் கிழக்குப் பகுதி அமெரிக்காவின் பிடியில் இருந்து மீட்கப்பட வேண்டும் என ரஸ்ய அதிபர் பூட்டீன் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு நாம் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என மூன்று தலைவர்களும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.