Home செய்திகள் மேலும் இலங்கையைச் சேர்ந்த ஐவர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

மேலும் இலங்கையைச் சேர்ந்த ஐவர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

259 Views

மேலும் ஐந்து இலங்கையர்கள்  கடந்த வியாழக்கிழமை தமிழகத்திற்கு அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரும் இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என The Hindu செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் மூலம், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு  தமிழகத்தில்  தஞ்சடைந்துள்ள   அகதிகளின் எண்ணிக்கை 214 ஆக உயர்ந்துள்ளது.

பத்து இலங்கையர்களைக் கொண்ட குழுவொன்று புதன்கிழமை தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்தனர்.

அவர்களில் இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள், ஒரு இளைஞர், ஐந்து குழந்தைகள் உள்ளிட்டவர்கள் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version