அனைத்து கட்சி கூட்டம்; ரணிலின் அழைப்புக்கு ஜனாதிபதி சாதகமான பதில்

gota ranil அனைத்து கட்சி கூட்டம்; ரணிலின் அழைப்புக்கு ஜனாதிபதி சாதகமான பதில்அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தற்போதைய கோவிட் 19 நிலவரம் தொடர்பில் ஆராயுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சாதகமாகப் பரிசீலித்துள்ளார் என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஐ. தே. க. தலைவரும் எம்.பியுமான ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்தித்து பேசினார்.

இதன்போது ஜனாதிபதி அவரின் கருத்தை ஏற்றுக் கொண்டார். அனைத்து கட்சி கூட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை அரசியல் தலைவர்கள் முன்வைக்கலாம். ஐக்கிய தேசியக் கட்சி தனது முன்மொழிவுகளை ஏற்கனவே முன்வைத்துள்ளதையும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக் காட்டினார்.

அத்துடன், கோவிட் 19 தொடர்பான வேறு சில பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

எனினும், அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஜனாதிபதி சாதகமாக இருந்தார். ஆனால், மாநாடு கூட்டப்படுமா என்பதை அவர் உறுதி செய்யவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அறிக்கை தெரிவித்துள்ளது.

ilakku-weekly-epaper-143-august-15-2021