Home ஆய்வுகள் அஜித் போயகொடவின் ‘நீண்ட காத்திருப்பு’

அஜித் போயகொடவின் ‘நீண்ட காத்திருப்பு’

935 Views

“இது என் கதை. நடந்தபடியே சொன்ன கதை” என ‘நீண்ட காத்திருப்பு’ நூலின் ஆசிரியர் ரியர் கொமடோர் அஜித் போய கொட கூறியபடி ஒரு கதையைச் சொல்வ தன் மூலம் வரலாறொன்றின் பக்கங்க ளைத் தேடலுக்கு உட்படுத்துகிறார். நூலை வாசிப்போரையும் தேடலில் ஈடுபட வைக்கி றார். ‘வடலி’யின் வெளியீடாக வரும் இந் நூலின் கதையை நூலாசிரியர் சொல்லக் கேட்டு, அரங்க இயக்குநரும், பதிப்பாசிரி யருமான சுனிலா கலப்பதி எழுதியுள்ளார். தமிழ் மொழிபெயர்ப்பு தேவாவுடன் இணை ந்து சத்தியதேவனும், கௌரிபாலனும் செய் துள்ளனர். இந்த நூல் இலங்கைத் தீவிற்குள் தீர்க்கப்பட வேண்டிய அரசியலைப் பேசுவ தற்கான தேடலை ஏற்படுத்துகின்றது.

நூலாசிரியர் பணி ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி. 1974 முதல் 2004 வரை இவர் சிறீல ங்காவின் கடற்படையில் பணியாற்றியுள்ளார். 1994 இல் தமிழீழ விடுதலைப் புலிக ளால் போர்க் கைதியாகப் பிடிக்கப்பட்ட இவரை, விடுதலைப் புலிகள் எட்டு ஆண்டு கள் சிறையில் வைத்துள்ளனர். 2002இல் இவர் அந்தச் சிறையிலிருந்து விடுதலை பெற் றார். அந்தப்பட்டறிவுடனேயே  ‘நீண்ட காத்திருப்பு’ நகர்கிறது.

போர்க் கைதிகளை விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகள் 2002இல் சிறீலங்கா அரசிற்கும் அவர்களிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு, அமைதி வழியிலான பேச்சுவார்த்தை இடம் பெற்றிருந்த காலத்தில் நல்லெண்ண அடிப்படையில் போர்க் கைதிகளை விடுதலை செய்தனர். இது இரண்டு கட்டமாக இடம் பெற்றிருந்தது. முதலில் கிளிநொச்சியிலும், இரண்டாம் கட்டமாக வவுனியா வடக்கில் பனிக்கங் குளத்திலும் இடம் பெற்றது. இரண்டாம் கட்டம் இரு நாடுகளிற்கு இடையிலான போர்க் கைதிகள் பரிமாற்றம் போன்றே இடம் பெற்றது. நீண்ட காத்திருப்பை வாசிக்கின்ற போது குறிப்பிட்ட இரண்டு நிகழ்வுகளிலும் செய்தி சேகரிப்பிற்காக நானும் அந்த இடங்களில் நின்றதன் காரணமாக அந்தக் காட்சிகள் மனதுள் மீண்டும் வந்து போனது. அந்த நேரம் நூலாசிரியர், “நாட்டின் மீது எனக்கு மிகுந்த பற்றுள்ளது. எனவே நான் மீண்டும் கடற்படையில் இணைந்து பணியாற்றுவேன்“ எனக் கூறினார், அதன்படியே அவரும் நடந்தார். ஆனால் அவர் மீதான ஐயம் கொண்ட அரச தரப்பு தனக்கு அவமரியாதை யையும், மன உளைச்சலையும் தந்ததெனவும், நீதிக்காக தான் நீதிமன்றத்தின் படி ஏறியதையும் கூட இந்த நூலில் அஜித் போயகொட விபரிக்கின்றார்.

அஜித் போயகொடவின் ‘நீண்ட காத்திருப்பு’:

தான் கண்டியைச் சேர்ந்தவர். தனக்கு கடற் படை சீருடையை மிகவும் பிடிக்கும். கடற்ப டையே ஒழுக்கமானது என நினைத்ததன் விளைவே நான் கடற்படையில் இணை வதற்குக் காரணம் என நூலின் தொடக்கத்தை இப்படியே தொடங்குகின்றார். கடற் படை பற்றிய அறிமுகத்துடன் நூலிற்குள் படிப் போரை இழுத்துக் கட்டிப் போட முயலும் இவர், பல விடயங்களைப் பேசுகிறார். பயிற்சிக் காலங்களில் சரக்குக் கப்பல்களில் பணியாற்றியமை. இதன் காரணமாக வெளிநாடுகளின் துறைமுகங்களிற்குச் சென் றவை பற்றியும் நூலில் விபரிக்கின்றார்.

‘77 கலவரம்’ பற்றி பின்வருமாறு குறிப்பிடுகி றார். “இந்த இனக் கலவரத்தில் தமிழ் மக்கள் சிங்களக் கலவரக் கும்பல்களால் தாக்கப் பட்டனர், கொல்லப்பட்டனர். அதே நேரம் தான் உட்பட பல சிங்களவர் தமிழ் மக்களைக் காப்பாற்றினோம்” (பக்கம் 33) என்கிறார். அது உண்மையானது என் பதை ஒரு சம்பவத் தினைக் குறிப்பிடுவதன் மூலம் நிரூபிக்கி ன்றார். “வெளிநாட்டில் வேலை செய்யும் ஒருவரின் மனைவியும், மகளும் சிங்களக் கலவரக் கும்பலால் குறிவைக்கப் படுகின்றனர். இதன் போது நான் கடற்படையில் பணியாற்றுபவர் என்பதால், அயலவர்களுடன் இணைந்து குறிப்பிட்ட வீட்டை நோக்கி ஓடிச் சென்று அவர்களைக் காப்பாற்றுவதில் ஈடுபட்டேன், இதன் போது சிங்களக் கலவரக் கும்பலை கலைந்து போக வைத்த பின்னர், வீட்டின் கதவைத் திறவுங்கள் என கேட்ட போது அந்தப் பெண்கள் கதவைத் திறக்க மறுத்து விட்டனர். பின்னர் கதவை உடைத்துப் பார்த்த போது, ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு தம் செல்ல நாயையும் அணத்துக் கொண்டு அவர்கள் நடுங்கிக் கொண்டிருந்தனர்.” என்று கூறுகிறார்.(பக்கம் 33)

இதனைத் தொடர்ந்து வாசித்த போது எனது தொண்டை வறண்டு போனது. தங்களால் காப்பாற்றப்பட்ட குறிப்பிட்ட பெண்களை யாழ்ப்பாணத்துக்கே அனுப்பி வைக்க முடிந்ததென அவர் கூறுவது தான் இலங்கைத் தீவின் அரசியலை கவர்ந்து நிற்கும் ஓர் முக்கிய பகுதியாகும்.

வடக்கு கிழக்கில் வாழ்ந்தவர்கள் ஏனைய இடங்களில் வாழ முடியாது என தமிழர் துரத்தப்பட்ட பின்னர் ஓர் முக்கிய விடயத்தை நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

“இந்நிகழ்விற்குப் பின்னர் வடக்கில் தமிழர் தாயகம் என்ற எண்ணத்திற்கு எதிராக என்னால் சிந்திக்க முடியவில்லை. தமிழர்கள் தெற்கில் பாதுகாப்பாக இருக்க முடி யாது. மாறாக வடக்கில் தான் பாதுகாப்புடன் இருக்க முடியுமானால், அதுவே அவர்க ளின் தாய் நிலம். அவர்களை தெற்கிலிருந்து வடபகுதிக்கு பாதுகாப்பைத் தேடிச் செல்ல வைத்ததன் மூலம் அரசு இதனை ஒத்துக் கொள்கிறது.” என்று குறிப்பிடுகிறார். (பக்கம் 34)

தமிழ் மக்கள் மீது இலங்கைத் தீவிற்குள் பாதுகாப்பற்ற சூழ்நிலை இருந்ததை நூலா சிரியர் தயக்கமின்றிக் குறிப்பிடுவதை இந்நூலில் நாம் காணலாம். பாதுகாப்புத் தேடி நாட்டை விட்டு தமிழர் கடற்பயணம் செய்து, புலம் பெயர்வதைக் கூட சட்டத்திற்குப் புறம்பாக, தாம் மனிதாபிமான அடிப்படையில் கண்டும் காணாதது போல விட்ட தாகக் கூறுகின்றார். அத்துடன் அரசு தென்பகுதி மக்களின் தேவைகளிற்கே முதலிடம் கொடுத்தது எனவும் அஜித் போயகொட சுட்டிக் காட்டுகின்றார்.

83இல் பதின்மூன்று படையினர் கொல்லப்பட்ட பின்னர் நிலைமை இன்னும் மோசம டைந்தது. முப்படைகளும் தரையில் முடக்கப்படுமளவிற்கு அங்கு நிலைமை ஏற்பட் டது என்பதையும் ஒளிவு மறைவின்றி விபரிக்கின்றார்.

“83இல் இன அழிவு தொடர்ந்தது. இதன் பின்பு படைகள் தரையில் முகாம்களுக்குள் முடக்கப்பட்டன.” என்கிறார். (பக்கம் 38)

தமிழின அழிப்பின் ஒவ்வொரு விடயத்தையும் தொட்டுச் சொல்லும் நூலாசிரியர், “மிகப் பெரிய கலாசாரப் பெறுமதி வாய்ந்த யாழ்.நூலகம் எரிக்கப்பட்டது” என்ற பண்பாட்டு இன அழிப்பையும் நீண்ட காத்திருப்பில் பதிவிடுகிறார். (பக்கம் 41)

ராஜீவ் காந்தி படுகொலை, பிறேமதாசா படுகொலை போன்றவற்றையும் பார்வைக்கு உட்படுத்தும் அஜித் போயகொட, 1990இல் வடக்கில் இருந்து முஸ்லிம்களை விடு தலைப் புலிகள் வெளியேற்றியமை மற்றும் காத்தான்குடிப் படுகொலையையும் அவர் இந்நூலில் பதிவிடத் தவறவில்லை. குறிப்பிட்ட இந்தப் படுகொலைக்கு விடுதலைப் புலிகளே காரணம் என்கிறார் நூலாசிரியர்.

போர் பற்றிய குறிப்பிடலுடன் அரசியல் நிலைப்பாடு பற்றியும், தீர்வு பற்றியும் இந்த நூல் பெரிதாகக் குறிப்பிடவில்லை. எனினும் முக்கியமான விடயங்கள் சிலவற்றை உணர்வு பூர்வமாக சிந்தனைக்கு உட்படுத்துகிறது.

போர் பற்றிய விபரிப்பின் போது, விடுதலைப் புலிகளால் தமது படைத்தளம் மீது சில மோட்டார் குண்டுகள் ஏவப்பட்டதாகவும், அதற்கான பதில் நடவடிக்கை பேரழிவு என்கிறார் நூலாசிரியர். “குறிப்பிட்ட தாக்குதல் காரைநகரில் நடந்தது, இதனை யடுத்து முகாமை விட்டு வெளியே வந்து பார்த்த போது வித்தியாசமான தொரு அழி வைக் கண்டேன்” என்கிறார்.

“இங்கு தான் தமிழ் கிராமத்துள் புகும் சிங்கள இராணுவத்தின் மனோநிலை என்ன என்பதை நான் பார்த்தேன். கண்ணில் பட்டதையெல்லாம் நிர்மூலமாக்கி இருக்கிறார் கள்.” என்று குறிப்பிடுகிறார். (பக்ம் 48)

படையினர் தமிழர் வாழ்விடங்களிற்குள் புகும் போது சூறையாடினார்கள். இது மிகவும் தவறு என்பதையும் இந்நூல் பதிவிடுகிறது. ஜே.வி.பியின் கிளர்ச்சியை ஒடு க்குவதற்காக தெற்கில் செயற்பட்ட இராணுவம் எப்படியானது. வடக்கில் உள்ள இராணுவம் எப்படியானது என்ற பார்வை இவரால் கேள்விக்கு உட்படுகிறது.

“தெற்கின் கொலைகார இராணுவமும், வடக்கின் வீர இராணுவமும் ஒரு விடயத்தைத் தான் செய்தார்கள்” என்கிறது ‘நீண்ட காத்திருப்பு’.

நூலாசிரியர் தனது கடற்படைப் பணி பற்றியும் போதுமான அளவிற்கு விபரிக்கின் றார். பூநகரி சண்டை பற்றி பின்வருமாறு கூறுகின்றார். “விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதலைத் தொடுத்தனர். இருநூறுக்கு மேற்பட்ட படையினர் கொல்லப் பட்டனர். ஏறக்குறைய அதே அளவானோர் காணாமல் போயினர். விடுதலைப் புலிகள் தரப்பி லும் சம அளவு இழப்பு ஏற்பட்டது” என்கிறார்.

11ஆவது அத்தியாயத்தில் தான், கட்டளை அதிகாரியாக கடமையாற்றிய கப்பலைக் கடற்புலிகள் தாக்கியதைதும், போர்க் கைதியாகப் பிடிபட்டதையும் நேர்த்தியாக விபரிக்கின்றார். அதே நேரம் விடுதலைப் புலிகளின் சிறையில் தான் பட்ட துயரை யும், அங்கிருக்கக் கூடிய நிலைமையின் காரணமாக மன உளைச்சலையும் கூட நூலாசிரியர் விரிவாக எழுதியுள்ளார். சாகரவர்த்தனவின் மீதான தாக்குதல் தெற்கில் பேரதிர்வை ஏற்படுத்தியது என்பதையும் அஜித் போயகொடவின் எழுத்தில் காண லாம்.

சாகரவர்த்தனவில் இருந்து போர்க் கைதியாகப் பிடிக்கப்பட்ட மற்றையவர் விஜித்த. இவரின் விபரங்களும் இயலுமானளவு பதிவு செய்யப் பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் சிறையின் பட்டறிவு நீண்ட விபரிப்பாகும். சிறை என்றால் இப்படித்தானே என அவர் பெருமூச்சு விடுவதாக எழுதியிருந்தாலும் சில நல்லவை, சில பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியவை என்பதை அவர் இருட்டடிப்பு செய்ய விரும்பவில்லை என்பது நன்கு தெரிகிறது.

தன்னோடு பேசிய தளபதி செல்லரெட்ணம் தனிநாடே இலக்கு என உறுதியான கொள்கை உடையவர். ஆனால் தனது நிலைப்பாடு கூட்டாட்சி அமைப்பு முறையே சிறந்த தீர்பு என நூலாசிரியர் வலியுறுத்துகின்றார்.

விடுதலைப் புலிகளின் சிறையில் இருந்து விடுதலையான பின்னர், இப்படி ஒரு சிறையின் பட்டறிவு தனக்கு கிடைத்ததனால் தான் அரசியல் ரீதியாக இலங்கைத் தீவின் இன முரண்பாட்டை முடிவிற்குக் கொண்டு வரலாம் என இவர் நீண்ட காத்தி ருப்பில் நிறுவ முற்படுகின்றார். அதேநேரம் புலிகளால் விடுவிக்கப்பட்ட பின்னர், புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட கிளிநொச்சிக்கு சென்று வந்தவராகவும் நூலாசிரியர் உள்ளார். காரணம் ஆழிப் பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் இவர் கிளிநொச்சி சென்று திரும்பினார்.

புலிகளுக்கும் இவருக்கும் இரகசியத் தொடர்பு இருக்கின்றது என அரசும், தென் னிலங்கை ஊடகங்களும் கூறிய போதும், சளைக்காது நீதிமன்றத்தை நாடி, போராடி, தான் நேர்மையானவர் என்பதை நிரூபித்தார். தனது குடும்பம் பற்றியும், குடும்பத் தைப் பிரிந்து வாழ்வதன் துயரம் பற்றியும் கூட நீண்ட காத்திருப்பில் காணலாம். 203 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் பலர் பேசத் தயங்கும் பல விடயங்களை ஈழ வரலாற்று ஆய்வாளர்கள் பார்க்க வேண்டிய நூலாக கொமடோர் அஜித் போயகொட படைத்துள்ளார்.

நட்புடன் கனகரவி

சுவிற்சர்லாந்து

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version