இந்திய தலைநகரை கடுமையாக பாதித்துள்ள காற்று மாசு

கடுமையாக பாதித்துள்ள காற்று மாசு

இந்திய தலைநகர் டெல்லியில் பல மாதங்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான அளவில் உள்ளது. கடுமையாக பாதித்துள்ள காற்று மாசு வாகன நெரிசல், அண்டை மாநிலங்களில் பயிர் கழிவுகளை எரித்தல் உள்பட பல்வேறு காரணங்களால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிலேயே இருந்து வருகிறது.

இதற்கிடையில், காற்று மாசை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்திருந்தது. ஆனால், தீபாவளியான நேற்று டெல்லியின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி பட்டாசு வெடிக்கப்பட்டது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று காற்றின் தரம் மிகவும் அபாய அளவை எட்டியுள்ளது. நகரின் ஒருசில பகுதிகளில் காற்றின் தரம் ’மிகவும் மோசம்’ என்ற நிலையில் இருந்து நேற்று ‘அபாயகம்’ என்ற அளவை எட்டியது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனர்.

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad இந்திய தலைநகரை கடுமையாக பாதித்துள்ள காற்று மாசு