Home செய்திகள் ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்க முடியாது -ரஷ்ய அதிபர் புதின்

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்க முடியாது -ரஷ்ய அதிபர் புதின்

download 1 2 ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்க முடியாது -ரஷ்ய அதிபர் புதின்

ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகள் என்ற போர்வையில் வரும் பயங்கரவாதிகள்  ரஷ்யாவுக்கு தேவையில்லை என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கிருந்து வெளியேறி வரும் மக்களுக்கு ஈரான்,பாகிஸ்தான், இந்தியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட ஒருசில நாடுகள் அடைக்கலம் வழங்கி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுபவர்களை மத்திய ஆசிய நாடுகளில் குடியமர்த்த வேண்டும் என மேற்கத்திய நாடுகள் யோசனை தெரிவித்துள்ளன.

இதனை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடுமையாக எதிர்த்துள்ளார்.

“ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளாக வருபவர்களை விசா இல்லாமல் ஏற்க அவர்கள் (மேற்கத்திய நாடுகள்) மறுக்கும் நிலையில், நாங்களும் எங்கள் அண்டை நாடுகளும் விசா இல்லாமல் ஏற்க வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் தலிபான்களை ஆப்கானிஸ்தானின் அரசாக ஏற்க போவதில்லை என கனடா போன்ற நாடுகள் கூறியுள்ள நிலையில், காபூல் நகரை கைப்பற்றிய பின்னர் தலிபான்களுக்கு ஆதரவாக ரஷ்யா கருத்து தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version