பட்டினியால் தவிக்கும் ஆப்கான் மக்கள்- ஐ.நா உணவு வழங்க திட்டம்

2021 637650829636035593 603 பட்டினியால் தவிக்கும் ஆப்கான் மக்கள்- ஐ.நா உணவு வழங்க திட்டம்

ஆப்கானிஸ்தானில் உள்ள 14 மில்லியன் மக்கள் பசியால் தவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அவையின் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மக்களுக்காக அண்டை நாடுகள் தங்களின் எல்லையைத் திறந்து வைக்குமாறு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தது.

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுக்குள் வந்தபிறகு அங்கிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேறி வருகின்றனர்.

அங்கிருந்து இன்னமும் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற முற்படுகின்றனர். ஆனால், விமான நிலையம் செல்ல  தலிபான்கள் மக்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் மக்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும் தலைநகர் காபூலில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், அங்கு மக்கள் உணவின்றி பட்டியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு ஒரு மாகாணத்தில் உணவு வழங்க தலிபான்களுடன் பேச்சு நடத்தி வருவதாக குறிப்பிட்ட ஐ.நாவின் உணவு அமைப்பு, ஆனால் அவர்கள் உணவு வழங்கி வந்த மூன்று மாகாணங்களில் உணவு வழங்குவதைத் தொடரவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் உணவு வழங்கும் திட்டத்தின் கணக்குப்படி, ஆப்கானிஸ்தானில் இரண்டு மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

ilakku-weekly-epaper-143-august-15-2021