குண்டுத் தாக்குதலில் பதவிக்கு வந்த கோட்டா அரசை வீட்டு போக வலியுறுத்தியும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு நீதி கோரியும் பாத யாத்திரை மேற்கொண்டிருந்த நடிகர் ஜொஹான் அப்புஹாமி காலிமுகத்திடலை சென்றடைந்தார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கோரி நடிகர் ஜொஹான் அப்புஹாமி நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய சான்த செபஸ்தியன் தேவாலயத்திலிருந்து கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலையம் வரை சிலுவை சுமந்து பாதயாத்திரை மேற்கொண்டிருந்தார்.
கடந்த 19ம் திகதி மாலை 3.15 இற்கு கட்டுவப்பிட்டிய தேவாலையததில் இருந்து ஆரம்பித்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தை சிலுவை சுமந்தவாறு கடந்த ஜொஹான் அப்புஹாமி, நேற்று (22) கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலையத்தை சென்றடைந்தார்.
இதையடுத்து அவர் காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தனது பாதயாத்திரையை நிறைவுக்கு கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த யாத்திரையின் போது “குண்டுத் தாக்குதலில் பதவிக்கு வந்த அரசு வீட்டிற்குப் போ” என்ற சுலோகத்தை சுமந்து ஆதரவாளர்கள் அவருடன் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.