Home உலகச் செய்திகள் ரோஹிங்கியா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்ப  நடவடிக்கை எடுக்க வேண்டும்: வங்கதேசம் ஐ.நா.வில் வலியுறுத்தல்

ரோஹிங்கியா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்ப  நடவடிக்கை எடுக்க வேண்டும்: வங்கதேசம் ஐ.நா.வில் வலியுறுத்தல்

மியான்மருக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை

ரோஹிங்கியா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்ப  நடவடிக்கை எடுக்க வேண்டும்: வங்கதேசம் ஐ.நா.வில் வலியுறுத்தல். ஐ.நா. பொதுச் சபையின் 76-ஆவது ஆண்டுக் கூட்டத்தில் பொது விவாதம் கடந்த 21ம் திகதி முதல் 27ம் திகதி வரை நடைபெற்றது.

இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் நேரில் பங்கேற்று உரையாற்றினர். அதில் உரையாற்றிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது உரையில், தடுப்பூசி சமநிலை, கொரோனா தொற்றிலிருந்து நிலையான மீட்பு, பருவநிலை சவால்கள் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
அத்தோடு தங்கள் நாட்டில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கயா அகதிகள் தம் சொந்த நாடான மியான்மருக்கு திரும்ப சர்வதேச சமூகம் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Exit mobile version