Home உலகச் செய்திகள் ஆப்கான் ஏதிலிகள் வருகையை தடுக்க நடவடிக்கை: துருக்கியை ஒட்டிய எல்லையில் பெருஞ்சுவர்  எழுப்பியுள்ள கிரீஸ் அரசு

ஆப்கான் ஏதிலிகள் வருகையை தடுக்க நடவடிக்கை: துருக்கியை ஒட்டிய எல்லையில் பெருஞ்சுவர்  எழுப்பியுள்ள கிரீஸ் அரசு

ஆப்கான் ஏதிலிகள் வருகையை தடுக்க நடவடிக்கை

துருக்கியை ஒட்டிய எல்லையில் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்புச் சுவர் மற்றும் வேலி அமைக்கும் பணிகளை கிரீஸ் அரசு முடித்திருக்கிறது.

ஆப்கானில் இருந்து ஆயிரக்கணக்கான ஏதிலிகள் வரலாம் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

கடந்த 2010 ஆம் ஆண்டில் சிரியா, ஆப்கான், ஈராக் உள்ளிட்ட நாடுகளின் உள்நாட்டுப் போர்களால் பல இலட்சம் ஏதிலிகள் வெளியேறி அண்டை நாடுகளில் அடைக்கலம் புகுந்தனர். அன்று முதல் ஏதிலிகள் தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள கிரீஸ் அரசு தனது எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்கியுள்ளது.

ilakku-weekly-epaper-144-august-22-2021

Exit mobile version