கொரோனாவைக் காரணம் காட்டி நிலம் அபகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

கொரோனாவைக் காரணம் காட்டி நிலம் அபகரிக்கப்படுவதாக

கிண்ணியா பிரதேச செயலக பகுதியில் உள்ள வட்டமடு எனும் கிராமத்தில்  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை  அடக்கம் செய்வதற்காக காணி ஒன்று எடுக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த காணி விவசாய நிலம் என விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

“சுமார் பத்து ஏக்கருக்கும் மேற்பட்ட இக் காணியில், 15 வருடங்களுக்கும் மேலாக விவசாய செய்கையை மேற்கொண்டு வருகிறோம். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய, என்ற போர்வையில் எங்கள் காணியை அடாத்தாக பிடித்துள்ளார்கள். இது விவசாய காணி எங்களுக்கு முன்கூட்டி இது தொடர்பாக அறிவிக்காமல் காணியை அபகரித்துள்ளனர்.” கொரோனாவைக் காரணம் காட்டி நிலம் அபகரிக்கப்படுவதாக காணி உரிமையாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி எங்களது காணியை மீட்டுத் தார வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.