Home உலகச் செய்திகள் ஆக்கஸ் ஒப்பந்தம்: அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை

ஆக்கஸ் ஒப்பந்தம்: அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை

வடகொரியா

அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் செய்து கொண்டிருக்கும் ஆக்கஸ் என்ற பாதுகாப்பு உடன்பாட்டால் அணு ஆயுதப் போட்டி உருவாகும் என வடகொரியா எச்சரித்துள்ளது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்புச் சமநிலையை ஆக்கஸ் ஒப்பந்தம் குலைக்கும் என்று வடகொரியா  கூறியுள்ளார்.

கடந்த வாரம் இரண்டு வகையான ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்தது. அவற்றில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் வகையிலான க்ரூஸ் ரக ஏவுகணையும் அடங்கும்.

ஆக்கஸ் உடன்பாட்டின்படி அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கித் தொழில் நுட்பங்களை அமெரிக்காவும் பிரிட்டனும் அவுஸ்திரேலியாவுக்கு வழங்க இருக்கின்றன.

இது சீனாவை ஒடுக்குவதற்கான நடவடிக்கை என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகிறார்கள். ஏற்கெனவே இந்த உடன்பாட்டுக்கு சீனா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version