Home உலகச் செய்திகள் அப்துல்ரசாக் குர்னா: நோபல் வென்ற அகதி

அப்துல்ரசாக் குர்னா: நோபல் வென்ற அகதி

நோபல் வென்ற அகதி


கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து, நோபல் வென்ற அகதி தன்னுடைய 18 வயதில் கல்விக்காகக் குடும்பத்தைப் பிரிந்து இங்கிலாந்து சென்று, தாய்நாட்டின் அரசியல் சூழல் காரணமாக அங்கு மீண்டும் திரும்ப முடியாமல், படிக்க வந்த நாட்டிலே அகதியாகத் தஞ்சமடைந்த ஒரு இளைஞன், ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றது வாழ்க்கைப் பயணம் குறித்து வியப்பை ஏற்படுத்துகிறது.

1948-ல் தான்சானியாவில் உள்ள சான்சிபார் தீவில் பிறந்த குர்னா, 1967 வாக்கில் குடும்பத்தைப் பிரிந்து பிரிட்டனுக்குச் சென்றார். அடுத்த சில ஆண்டுகளில், சான்சிபாரில் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்ததும் அங்கு உள்நாட்டுக் கலவரம் வெடித்தது. இதனால், சொந்த நாடு திரும்ப முடியாமல் பிரிட்டனிலே அகதியாகத் தஞ்சம் அடைந்தார்.

அதன் பிறகு பல்கலைக்கழகம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்த குர்னா, சமீபத்தில் ஓய்வுபெறும் வரையில் அங்கு பேராசிரியராகப் பணியாற்றினார். சிறிய வயதிலேயே வீட்டைப் பிரிந்து வேறொரு உலகில் தன்னந்தனியராகத் தனக்கான பாதையைக் கண்டடைய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானதே தன்னுடைய எழுத்துகளுக்கு ஆதாரமாக இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

72 வயதாகும் குர்னா, தன்னுடைய வாழ்வின் பெரும் பகுதியை பிரிட்டனில் கழித்தாலும், அவர் தன்னை இன்னும் ஒரு அகதியாகவே உணர்கிறார்- முகமது ரியாஸ்

நன்றி: தமிழ் இந்து

Exit mobile version