ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சியில் கடத்தல்களும் சித்திரவதைகளும் தொடர்கின்றன-ITJP

கோட்டாபயவின் ஆட்சியில் கடத்தல்களும் சித்திரவதைகளும்

கோட்டாபயவின் ஆட்சியில் கடத்தல்களும் சித்திரவதைகளும்: ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் அடுத்து வரவுள்ள கூட்டத்தொடர் செப்டெம்பர் 13ம் திகதி ஆரம்பிக்க இருக்கின்ற பின்னணியில், “ சிறீலங்கா, 2020-2021 காலப்பகுதியில் பாதுகாப்பு படைகளினால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளும் பாலியல் துன்புறுத்தல்களும்” என்ற தலைப்பில் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பு (ITJP) ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

நினைவேந்தல் நிகழ்வுகளிலும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலும் பங்கு பற்றியவர்களையும் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்றுக்கொள்வர்களையும் கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்குவதோடு தமிழ் இளையோரை பாலியல் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்குவதாக மேற்படி ITJP ன் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

2019 நவம்பரில் ஆட்சிக்கு வந்த கோட்டாபய அரசினால் கடத்தப்பட்டு, சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு தற்பொழுது பிரித்தானியாவில் புலம்பதிந்திருக்கின்ற 15 தமிழர்களை சந்தித்து அவர்களது வாக்கு மூலத்தைப் பெற்ற ITJP-யின் பன்னாட்டு விசாரணையாளர்கள் குறிப்பிட்ட தமிழர்கள் வழங்கிய விரிவான வாக்குமூலங்களை பதிவு செய்திருக்கின்றார்கள்.

இப்படிப்பட்ட சித்திரவதைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டவர்களுள் சீருடை தரித்த சிறீலங்கா இராணுவ அதிகாரிகளும் சித்திரவதைகளை அதிகமாக முன்னெடுத்து வரும் பயங்கரவாதத்திற்கு எதிரான காவல்துறை பிரிவினரும் அடங்குகின்றனர்.

முழு அறிக்கையையும் காண கீழ் உள்ள லிங்கை அழுத்தவும்

07.09.2021_Press_release_torture_report_Tamil_Translation

ilakku-Weekly-Epaper-146-September-05-2021