Home செய்திகள் கிழக்கில் உணர்வெழுச்சியுடன் நுழைந்த போராட்டப் பேரணி

கிழக்கில் உணர்வெழுச்சியுடன் நுழைந்த போராட்டப் பேரணி

153 Views

Gallery

சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழரின் கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக  4 நாட்களுக்கு முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தின் 3ஆம் நாளான இன்று முல்லைத்தீவில் இருந்து ஆரம்பித்து தற்போது திருகோணமலை திரியாய்ப் பகுதியை சென்றடைந்துள்ளது.

தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளான தாயகம், தேசியம், சுயநிர்நணயம் என்பவற்றை வென்றெடுக்கும் நோக்கில் சிறிலங்காவின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரி நாள் என பிரகடனப்படுத்தி கடந்த 4ஆம் திகதி வடக்கிலிருந்து கிழக்கு வரையான உரிமைப் போராட்டத்திற்கான பேரணியை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரும், சமூக அமைப்பினர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆரம்பித்திருந்தனர்.

இந்தப் பேரணி கிளிநொச்சி ஊடாக முல்லைத்தீவை சென்றடைந்து, இன்று திருகோணமலையை வந்தடைந்தது. இந்தப் பேரணியானது திருகோணமலையை சென்றடைந்ததும், திருகோணமலையில் உள்ள தமிழ் தேசியத்தை ஆதரிப்பவர்களினால் வரவேற்கப்பட்டதுடன் எழுச்சிப் பேரணியானது திருகோணமலையில் எழுச்சியுடன் நடைபெற்று வருகின்றது.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version