சீனாவில் பரவும் புதியவகை கொரோனா-அச்சத்தில் உலக நாடுகள்

சீனாவில், ஓமிக்ரான் துணை வகை XBB வைரஸ் மூலம் மீண்டும் கொரோனா விரைவாகப் பரவி வருவதாக அந்நாட்டு ஊடங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்தப் புதியவகை கொரோனா அலை, ஜூன் மாத இறுதிக்குள் சீனாவில் உச்சம் தொடும் எனவும் அப்போது ஒரு வாரத்தில் 6.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ள நிலையில், இரண்டு புதிய கொரோனா தடுப்பூசிகளை சீனா விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

கடந்த மே 22ஆம் திகதி சீனாவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், சுவாச நோய்க்கான சீன தேசிய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரான நிஜாங் நன்ஷான், “ஓமிக்ரான் துணை வகை XBB வைரஸ் விரைவாகப் பரவுவதால் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது உலகின் பிற பகுதிகளையும் பாதிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து உருவான கொரோனா, உலகம் முழுவதும் பல நாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இந்தச் செய்தி உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

76ஆவது உலக சுகாதார மாநாட்டில், “கொரோனாவைவிட பெருந்தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும்” என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறியுள்ள நிலையில், சீனாவில் வேகமெடுக்கும் புதியவகை கொரானா உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.