Tamil News
Home செய்திகள் 13ஆவது திருத்தத்தை தாண்டிய சமஸ்டி முறை அரசியல் தீர்வு சாத்தியமில்லை- குருசாமி சுரேந்திரன்

13ஆவது திருத்தத்தை தாண்டிய சமஸ்டி முறை அரசியல் தீர்வு சாத்தியமில்லை- குருசாமி சுரேந்திரன்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் சமஸ்டி முறையை நோக்கி செல்லுவது சாத்தியமற்றது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (22.01.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 13ஆவது அரசியல் திருத்தம் எங்களுடைய தீர்வல்ல என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். ஆனால் 13ஆவது அரசியலமைப்பு யாப்பில் இருக்கும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தாமல் அதை தாண்டிய சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை நோக்கி நாங்கள் நகர்வது என்பது சாத்தியமற்ற ஒன்று என சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version