Tamil News
Home செய்திகள் இலங்கை போன்ற நாடுகளிற்கு உதவுவதற்கு ஜி20இன் கடன் மறுசீரமைப்பிற்கான பொது கட்டமைப்பு அவசியம் – சர்வதேச...

இலங்கை போன்ற நாடுகளிற்கு உதவுவதற்கு ஜி20இன் கடன் மறுசீரமைப்பிற்கான பொது கட்டமைப்பு அவசியம் – சர்வதேச நாணய நிதியம்

இலங்கை போன்ற நடுத்தர வருமான நாடுகளிற்கு ஆதரவளிப்பதற்கு ஜி20 அமைப்பின் கடன் மறுசீரமைப்பிற்கான பொது கட்டமைப்பு அவசியம் என சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.

கடன் நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் ஒரு நாடு கடன் உதவி கோரியவுடன் கடன் சேவை கொடுப்பனவுகளை முடக்கவும் இலங்கை போன்ற நடுத்தர வருமான நாடுகளிற்கு ஒரு செயல்முறையை ஆரம்பிப்பதற்கும் ஜி20 அமைப்பின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பொதுவான் கட்டமைப்பில் மாற்றங்கள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

கடன அளவு அதிகமாக காணப்படும்போது கடன் தீர்மானம் குறித்த  நம்பிக்கை அற்றுப்போகும் ஆபத்து குறித்து கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்  கடன் நெருக்கடியில் சிக்குண்டுள்ள நாடுகள் சர்வதேச நிதி ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் அளவிற்கு பெரியவை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version