Tamil News
Home செய்திகள் சிறீலங்காவில் ஊடக சுதந்திரம் மறுக்கப்படுகின்றது – அனைத்துலக மன்னிப்புச்சபை

சிறீலங்காவில் ஊடக சுதந்திரம் மறுக்கப்படுகின்றது – அனைத்துலக மன்னிப்புச்சபை

முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டதற்காக சிறீலங்கா அரசினால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஊடகவியலாளர் சக்திகா சத்குமார உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

நேற்று (30) வெளியிட்ட அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பௌத்த ஆலயங்களில் பௌத்த துறவிகளால் பாலியல் துன்புறத்தல்களுக்கு உள்ளாகிய இளம் துறவிகள் தொடர்பில் பத்தி ஒன்றை எழுதி முகநூலில் பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்ட சத்குமார தற்போது 10 வருட சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

அமைதியான முறையில் தனது கருத்தை வெளியிட்டவரை கைது செய்துள்ளது ஊடக சுதந்திரத்தை மீறும் செயலாகும். எனவே அவர் நிபந்தனையற்ற முறையில் உடனடியாக விடுதலைசெய்யப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version