Home செய்திகள் பாதுகாப்பற்ற மீன் அட்டைப் பண்ணை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

பாதுகாப்பற்ற மீன் அட்டைப் பண்ணை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

மன்னார் மாந்தை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட இலுப்பை கடவை பகுதியில் மக்கள் குடியிருப்பில் அமைக்கப்பட்டு உரிய பாதுகாப்பு மற்றும் பாராமறிப்பு இன்றி காணப்படும் நண்டு, அட்டை, மீன் பண்னைகள் தொடர்பாக ஊர்மக்கள் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து   அறிக்கையிட சென்ற ஊடகவியலாளரை அச்சுறுத்தும் விதமாக செயற்பட்ட இலுப்பைகடைவை மீனவ சங்கத்தலைவர் மற்றும் அட்டை பண்ணையின் உரிமையாளர் மீதும் இலுப்பைக் கடவை காவல்  நிலையத்தில் முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளது.

DSC 0383 பாதுகாப்பற்ற மீன் அட்டைப் பண்ணை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

குறித்த நபர்கள் ஊடகவியலாளரை அச்சுறுத்தி புகைப்பட கருவியில் எடுக்கப்பட்ட ஆதாரங்களையும் அழிக்க முட்பட்டுள்ளனர்

மேலும் தீங்கு விளைவிக்கும் அட்டை,மீன்  பண்ணைகள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்திய இளைஞர்  மீது தாக்குதல் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து இளைஞர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாகவும்  ஊடகவியலாளரின் பணிக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாகவும் இலுப்பைக் கடவை காவல் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது.

குறித்த இலுப்பை கடவை பகுதியில் மக்கள் குடியிருப்பு பகுதியில் எந்த வித பாதுகாப்பும் இன்றி ஆழமான குழிகள் தோண்டப்பட்டு பண்ணைகள் அமைக்கப்பட்டு தற்போது பராமரிப்பு இல்லாத நிலையில்,குறித்த விடயம் தொடர்பாக ஏற்கனவே பொதுமக்களால் மன்னார் மாவட்ட செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம்   முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version