Tamil News
Home உலகச் செய்திகள் மூன்றாம் உலகப் போருக்காக சீனா தயாரித்த உயிரி ஆயுதமா கொரோனா?

மூன்றாம் உலகப் போருக்காக சீனா தயாரித்த உயிரி ஆயுதமா கொரோனா?

கொரோனா வைரஸ் தீவிரமடைவதற்கு முன்னரே 2015-ல் சீன விஞ்ஞானிகள் இது போன்ற வைரஸ் எனும் உயிரி ஆயுதத்தை உருவாக்குவது பற்றி விவாதித்ததாக வீக் எண்ட் அவுஸ்திரேலியன் (Weekend Australian) என்ற ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சீனாவின் வூஹானில் 2019-ல் உருவான கொரோனா  வைரஸால், இதுவரையில், உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 இலட்சத்தைக் கடந்துள்ளது. அதே நேரம்  பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15.88 கோடியைக் கடந்துள்ளது.

இந்நிலையில்,  2015-ம் ஆண்டு  சீன விஞ்ஞானிகள் சார்ஸ் கொரோனா வைரசை “புதிய யுக மரபணு ஆயுதங்கள்” என்று வர்ணித்தது தெரியவந்துள்ளது. அதாவது ஆபத்தான வைரஸ்களை செயற்கையாக உருவாக்கி அதை உயிரி ஆயுதமாகப் பயன்படுத்தத் திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

உயிரி ஆயுதமாக்கி மனித நோய் வைரஸாக உருவாக்கி வெளி உலகில் பரவவிடுவது பற்றி விவாதித்தது இப்போது தெரியவந்துள்ளது. இதனை வீக் எண்ட் ஆஸ்திரேலியன் என்ற ஊடகம் வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த  கட்டுரையின் தலைப்பு The Unnatural Origin of SARS and New Species of Man-Made Viruses as Genetic Bioweapons என்பதாகும். சீன இராணுவ விஞ்ஞானிகள் இந்த வைரஸை ஆயுதமாக்கி மனித உயிர்களிடையே பரவவிடுவது பற்றி விவாதித்துள்ளனர் என்கிறது இந்தக் கட்டுரை. 3ம் உலகப்போரை உயிரி ஆயுதம் மூலம் நடத்த திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான இரகசிய ஆவணங்கள் அமெரிக்க வெளியுறவுத் துறைக்குக் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதில், இந்த வைரஸை போர் ஆயுதமாகப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். போர் என்று அல்ல, தன்னை எதிர்க்கும் நாடுகள் மீதும் ஏவி விட திட்டமிடப்பட்டுள்ளது. வைரஸ் இயற்கையானதாக தோன்றும் அளவுக்கு ஆய்வுகள் இருக்க வேண்டும் என்று ஆய்வுகளும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

அதாவது எதிர்காலத்தில் உலக நாடுகள் கண்டுப்பிடித்து விடக்கூடாது, குற்றஞ்சாட்டினாலும் அதை ஆணித்தரமாக மறுக்கும் அளவுக்கு இயற்கையானதாக அந்த வைரஸைக் காட்டும் ஆய்வுகள் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று இந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கசிந்த இந்த ஆவணத்தை ஆய்வு செய்த சைபர் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட் ராபர்ட் பாட்டர், இந்த ஆவணங்கள் நிச்சயம் போலியானவை அல்ல என்று அவுஸ்திரேலிய ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவுஸ்திரேலிய ஸ்ட்ராடெஜிக் பாலிசி நிறுவனத்தின் பீட்டர் ஜெனிங்ஸ் கூறும்போது,  “இந்த கண்டுப்பிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு கொரோனா வைரஸ் மாதிரிகளை இராணுவப் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது பற்றியும் அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது  பற்றியும் பேசியுள்ளனர், சிந்தித்துள்ளனர் என்பதற்கான ஆதாரம் இது” என்கிறார்.

Exit mobile version