Tamil News
Home செய்திகள் சீனா ஆதரவாளரை தூதுவராக ஏற்றுக்கொள்ள இந்தியா இணக்கம்

சீனா ஆதரவாளரை தூதுவராக ஏற்றுக்கொள்ள இந்தியா இணக்கம்

இந்தியாவுக்கான இலங்கை தூதுவராக மிலிந்த மொரகொடவை ஏற்றுக்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறீலங்காவின் இந்த நியமனத்தை இந்தியா ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற ஊகங்கள் முன்னர் வெளியிடப்பட்டிருந்தன. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒரு நெருக்கமான பிணைப்பை ஏற்றுடுத்துவதில் முன்னின்று உழைத்ததுடன், சீனாவின் ஆதரவாளராக மொரகொட இருப்பதே இந்தியா அவரது நியமனத்தை ஏற்றுக்கொள்ளாது என்பதற்கான காரணங்களாக கூறப்பட்டன.

ஆனால் இந்தியா தற்போது மொரொகொடாவை ஏற்றுக்கொள்ளும் தனது முடிவில் மாற்றமில்லை எனவும், அவரின் பதவியேற்பில் உள்ள தாமதத்திற்கு இலங்கை அரசே காரணம் எனவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார மண்டல கடற்பகுதியில் அமெரிக்காவின் 7 ஆவது கடற்படை பிரிவு தன்னிட்சையாக அண்மையில் போர் ஒத்திகையை மேற்கொண்டதற்கு இந்தியா தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்ததும், அதனை அமெரிக்கா நிராகரித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version