Tamil News
Home செய்திகள் இலங்கையில்  உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும்  சிறப்பு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை

இலங்கையில்  உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும்  சிறப்பு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை

இலங்கையில்  உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும்  எதிர்வரும் புதன்கிழமை சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல் நிலையங்கள் மற்றும்  தலைமை காவல்துறை அதிகாரிகளுக்கு, காவல்துறை தலைமையகம் இதனை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் சுமார் 277 பேர் உயிரிழந்திருந்தனர். மேலும் 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் நினைவாகத் தேவாலயங்களில் விசேட ஆராதனைகள், வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன் காரணமாக அன்றைய தினம் இவ்வாறு பாதுகாப்பு வழங்கவுள்ள தாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெறவுள்ள விசேட ஆராதனை நிகழ்வுகள் காரணமாக, தேவாலயத்துக்கு அருகிலுள்ள சில வீதிகளில் நாளை   மாலை 4 மணி முதல் மறுநாள்   நண்பகல் 12 மணி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version