Tamil News
Home செய்திகள் இலங்கைக்கு கண்காணிப்பு ஆளில்லா உளவுவிமானங்கள் வழங்கிய அவுஸ்திரேலியா: தமிழ் அகதிகள் கவுன்சில் கண்டனம்

இலங்கைக்கு கண்காணிப்பு ஆளில்லா உளவுவிமானங்கள் வழங்கிய அவுஸ்திரேலியா: தமிழ் அகதிகள் கவுன்சில் கண்டனம்

இலங்கையில் அரசியல் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் இலங்கை காவல்துறைக்கு அவுஸ்திரேலிய அரசு கண்காணிப்பு ஆளில்லா உளவுவிமானங்கள் வழங்கியுள்ளமைக்கு அவுஸ்திரேலியாவை மையமாகக் கொண்டு செயல்படும் தமிழ் அகதிகள் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.

“பல்வேறு குற்றச்செயல்களைத் தடுக்க இந்த ஆளில்லா உளவுவிமானங்கள் பயன்படும் எனக் கூறுகிறது அவுஸ்திரேலிய எல்லைப்படை. ஆனால், இந்த நன்கொடை அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையின் அங்கமாக வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த ஆளில்லா உளவுவிமானங்கள் இலங்கையிலிருந்து தமிழர்கள் வெளியேறுவதைத் தடுக்கவும் அரசியல் செயல்பாட்டாளர்களை கண்காணிக்கவுமே உதவும்,” என தமிழ் அகதிகள் கவுன்சிலின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version