Tamil News
Home செய்திகள் கொழும்பு துறைமுகநகர சட்ட ஒழுங்கு நடவடிக்கையில் சீன காவல்துறை – அமைச்சர் அஜித்கப்ரால் விளக்கம்

கொழும்பு துறைமுகநகர சட்ட ஒழுங்கு நடவடிக்கையில் சீன காவல்துறை – அமைச்சர் அஜித்கப்ரால் விளக்கம்

கொழும்பு துறைமுகநகரம் சீனாவின் காலனியாக காணப்படும் என்றும் அங்கு சீன சீனகாவல்துறையினரே கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிராகரித்த இராஜாங்க அமைச்சர் அஜித்கப்ரால், கொழும்பு துறைமுகநகரில் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் இலங்கை  காவல்துறையினரே ஈடுபடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்புதுறைமுகநகரம் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உத்தேச கொழும்புதுறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் துறைமுகநகரை சீனாவின் ஒரு பகுதியாக மாற்றாது என தெரிவித்துள்ள அவர் இலங்கையின் சட்டங்களே நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உத்தேச சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதும் ஜனாதிபதி நியமிக்கும் ஆணைக்குழுவிடமே துறைமுக நகர்மீதான கட்டுபாடு காணப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version