Tamil News
Home உலகச் செய்திகள் இராமர் பாலம் குறித்த வழக்கை விசாரிக்க உச்ச நீதி மன்றம் மறுப்பு

இராமர் பாலம் குறித்த வழக்கை விசாரிக்க உச்ச நீதி மன்றம் மறுப்பு

இராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக்கோரிய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க இந்திய உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

இராமேஸ்வரம் அருகே பாம்பனிலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு இடையே சுண்ணாம்பு கற்களான 48 கிலோ மீற்றர் நீளம் கொண்ட பாலம் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது.

இந்த பாலம் “ இராமர் பாலம்“ என  அழைக்கப்படுகின்றது. இதனால் இந்த இராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 2015ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது,   இந்த மனுவை விரைந்து விசாரிகிக்க போதிய நேரமில்லாத காரணத்தால் இந்த வழக்கு தொடர்பாக அடுத்து வரும் தலைமை நீதிபதி முடிவு செய்வார் என நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

Exit mobile version