Tamil News
Home செய்திகள் ஐ.நா தீர்மானத்திற்கு எதிராக செயற்படுவதில் சிறீலங்கா தீவிரம்

ஐ.நா தீர்மானத்திற்கு எதிராக செயற்படுவதில் சிறீலங்கா தீவிரம்

பொது அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறைகளை சிறீலங்கா அரசு கைவிட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் அண்மைய தீர்மானம் தெரிவித்திருந்த போதும் அதனை உடடினயாகவே நிர-hகரித்து தனது நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது சிறீலங்கா அரசு.

ஜனநாயக வழிகளில் செயற்பட்டுவரும் அமைப்புக்களை தடை செய்துள்ள சிறீலங்கா அரசு, அந்த அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அச்சுறுத்தல்களையும் விடுத்து வருகின்றது.

புலம்பெயர்ந்த சமூகம் என்பது ஒன்று இல்லை எனவும் சிறீலங்காவின் அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதயா கம்மன்பில தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு பல அமைப்புக்கள் தடை செய்யப்பட்ட போதும், அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு தடைகள் நீக்கப்பட்டிருந்தன. ஆனால் சிறீலங்கா அரசின் தற்போதைய நடவடிக்கைகள் ஐ.நாவின் தீர்மானத்தை முற்றுமுழுதாக நிராகரிப்பதுடன், அங்கு உள்ள ஜனநாயக நடைமுறைகளை முற்றாக இல்லாது செய்யும் நடவடிக்கையுமாகும்.

சிறீலங்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஐ.நா தீர்மானத்தில் உள்ள சரத்துக்களின் அடிப்படையில் தமிழ் அமைப்புக்கள் தமது நடவடிக்கைகளை சிறீலங்கா அரசுக்கு எதிராக மேற்கொள்ள முடியும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version