Tamil News
Home உலகச் செய்திகள் நடுக்கடலில் உணவும் குடிநீரும் இல்லாமல் தத்தளிக்கும் ரோஹிங்கியா அகதிகள்!

நடுக்கடலில் உணவும் குடிநீரும் இல்லாமல் தத்தளிக்கும் ரோஹிங்கியா அகதிகள்!

இரண்டு வாரங்களுக்கு முன்பு, பிப்ரவி 11ம் திகதி, வங்கதேசத்திலிருந்து தென் கிழக்கு ஆசியா நோக்கி புறப்பட்ட, ரோஹிங்கியா அகதிகளின் ஒரு படகு, எஞ்சின் பழுதாகி கடல் நடுவில் சிக்கிக் கொண்டதாகவும் இதில் படகில் பயணித்த எட்டு பேர் இறந்துவிட்டதாக, அரக்கான் திட்டத்தின் இயக்குனர் கிறிஸ் லேவா கூறியுள்ளார்.

படகில் உள்ள சுமார் 90 அகதிகளில் பலர் மிக மோசமான நீர் இழப்பை எதிர்கொள்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையும், மனித உரிமை குழுக்களும் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் பலர் ஏற்கனவே இறந்திருக்கலாம் என்று அவர்களது குடும்பங்கள் கவலைப்படுகின்றனர்.

ரோஹிங்கியாக்கள், மியான்மரின் ராக்கைன் (அரக்கான்) மாகாணத்தில் இருந்து வன்முறை மூலம்  அகதிகளாக துரத்தப்பட்டனர். அவர்கள் வங்கதேசம், மலேசியா, இந்தோனேசியா, கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு பழைய படகுகளில் தப்பிச் செல்கின்றனர். இந்தியாவுக்குள் வந்த அகதிகளை இந்தியா ஏற்க மறுத்து மியான்மருக்கு திருப்பி அனுப்பி விட்டது. சொந்த நாட்டிற்கு திரும்ப வழியில்லாமல், அண்டை நாடுகளிலும் புகலிடம் கிடைக்காமல், புகலிடம் தேடி அவர்கள் படலில் புறப்பட்டனர்.

அந்தப் படகு இப்போல் இருக்கும் இடம் பற்றிய விபரம் சரியாகத் தெரியவில்லை என்றும், அருகில் உள்ள நாடுகளிடம் அந்தப் படகை தேடும்படி கேட்டுக் கொண்டுள்ளதாகவும், படகு கண்டுபிடிக்கப்பட்டதும் மனிதாபிமான உதவி வழங்க தயாராக இருப்பதாகவும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் துாதுவர் கூறியுள்ளார்.

படகில் சென்ற 25 வயதான இளைஞரின் அம்மா நசிமா கதுன் அவரது கதியைப் பற்றி கலகத்தில் உள்ளார்.

“கடவுளே, படகில் சிக்கிக் கொண்டுள்ள எல்லோரையும் உனது தெய்வீக சக்தியால் காப்பாற்று, அவர்களை எங்காவது ஒரு ஆற்றின் கரையில் சேர்த்து விடு. எனது மகன் அப்படிப்பட்ட ஒரு இடத்துக்குப் போய் சேர வேண்டும் என்ற எனது வேண்டுதலை நிறைவேற்ற” என்று நசிமா கதுன் கூறியுள்ளார்.

என் மகன் உயிரோடுதான் இருக்கிறானா? அவனுக்கு பட்டினியால் ஏதாவத ஆகி விட்டதா? என் மகன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று எந்த விபரமும் தெரியவில்லை. அவன் எப்படி தாக்குப் பிடிக்கிறான் என்று தெரியவில்லை. அவன் 4 லீட்டர் தண்ணீரை மட்டும்தான் எடுத்துச் சென்றான்” என்று அவர் கூறுகிறார்.

இந்திய கடலோர காவல்படை இது தொடர்பாக கூறுவதற்கு எதுவும் இல்லை என்று தெரிவித்து விட்டதாக  கூறப்படுகின்றது.

நன்றி -தி வயர்(WIRE)

Exit mobile version