Tamil News
Home செய்திகள் எனது கேள்விக்கான பதில்கள் இரண்டு மாதங்கள் கடந்தும் இன்னும் கிடைக்கவில்லை  – சபையில் சாணக்கியன் கேள்வி

எனது கேள்விக்கான பதில்கள் இரண்டு மாதங்கள் கடந்தும் இன்னும் கிடைக்கவில்லை  – சபையில் சாணக்கியன் கேள்வி

எனது கேள்விகளை சமர்ப்பித்து 2 மாதாங்களாகின்றன. இன்னும் எனக்குப் பதில் கிடைக்கவில்லை என இரா. சாணக்கியன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கேள்வி பதில் விவாதத்தின் போது தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், “சபாநாயகர் அவர்களே நான் நாடாளுமன்றத்திற்கு வருகை தருவது மட்டக்களப்பிலிருந்து. இதற்கான தூரம் 422 km ஆக உள்ளது (சிறு தவறு 350 Km என்று வர வேண்டும்). நான் எனது கேள்விகளை சமர்ப்பித்து 2 மாதாங்களாகின்றன. இன்னும் எனக்குப் பதில் கிடைக்கவில்லை. நான் உங்களிடம் கேள்வி எழுப்பியது செப்டெம்பர் மாத காலப்பகுதியில் அதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

இவ்வாறான நிலைமை இருக்குமாயின் எங்களுக்கு உடன் தெரிவித்தால் நாங்கள் மட்டக்களப்பிலிருந்து நாடாளுமன்றத்திற்கு வர வேண்டிய தேவை இருக்காது. எங்களுக்கு பேசுவதற்கு பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. இந்த விடயம் சுகாதாரத்துறை சம்மந்தமானது. முக்கியமாக Covid 19 சம்மந்தமான விடயங்கள். செப்டெம்பர் மாதம் சுகாதாரத்துறை அமைச்சரிடம் நான் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்க 3 வாரங்கள் கேட்டிருந்தார். இன்னும் அதற்கு பதிலளிக்கவில்லை.

எங்களது கேள்விகளுக்கு பதிலளிக்காமையினாலேயே எமது உரிமைகள் உதாசீனம் செயப்படுவதினாலேயே நாங்கள் P2P போன்ற போராட்டங்களை முன்னெடுக்கவேண்டியுள்ளது. ஆனால் இப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு காவல்துறையினர் தடை உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றனர். இதற்கான பதிலினை அரசாங்க அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்களே அளிக்க வேண்டும். நாங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க 2 வாரங்கள் கேட்டால் நாங்கள் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டிய தேவை இல்லை. நீங்கள் ஏன் எங்களுக்குப் பதிலளிக்க மறுக்கின்றீர்கள்? நாங்கள் கேட்பது மட்டக்களப்பு மாவட்டத்தின் சுகாதாரம் பற்றிய முக்கியமான கேள்விகள்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்களே நான் km தூரத்தினைக் கூறியது இதற்காக அல்ல. நான் குறிப்பிட வந்த விடயம் என்னவென்றால் சுகாதாரத்துறை சம்மந்தமான கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்பதினால் தான். முக்கியமான கேள்விகள் நெடுங்காலமாக இன்னும் பதிலளிக்கப்படமலேயே உள்ளன. அதற்காகவே நான் இந்தக் கேள்விகளை வினாவினேன். நான் பிரதமரிடமே அதிக கேள்விகளை வினாவினேன். ஏனெனில் அவரிடம் கேள்விகளை கேட்க முடியுமானதாக இருப்பது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே. அதனால் தான் நான் அதிக கேள்விகளை அவரிடம் எழுப்பினேன்.

நீங்கள் பல கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளீர்கள். அதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் இன்னும் சுகாதாரம் சம்மந்தமாக எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. சுகாதாரம் சம்மந்தப்பட்ட விடயம் என்பதனால் இதற்கு மூன்று பேரை இதற்கு நியமிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். அதன் போது கருத்து தெரிவித்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எனது கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் இருந்தால் ஊடகங்களில் என்னைப் பற்றி தவறான கருத்துக்களை முன்வைப்பார்கள். ஆகையினால் இவரது கேள்விகளுக்கு நான் பதிலளிக்கின்றேன்” என்றார்.

Exit mobile version