Tamil News
Home உலகச் செய்திகள் அவுஸ்திரேலியர்களுக்காக, 60 மொழிகளில் COVID  தடுப்பூசி பற்றிய தகவல்கள்

அவுஸ்திரேலியர்களுக்காக, 60 மொழிகளில் COVID  தடுப்பூசி பற்றிய தகவல்கள்

ஆங்கிலம் தவிர்ந்த வேறு மொழிகளைப் பேசும் அவுஸ்திரேலியர்களுக்காக, COVID தடுப்பூசி பற்றிய தகவல்களை 60 மொழிகளில் மொழிபெயர்க்கவும் அவை மக்களை அடையக்கூடிய விதத்தில் உருவாக்கவும் Federal அரசு சுமார் 1.3 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் தடுப்பூசி போடும் திட்டம் இம் மாதம் இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுமார் 80 ஆயிரம் முதல் தொகுதி தடுப்பூசிகள் அவுஸ்திரேலியா கொள்வனவு செய்துள்ளது. இத் தடுப்பூசிகள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படவுள்ளன. அத்துடன் இத் தடுப்பூசிகளை போட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

அதே நேரம் தற்காலிகமாக குடியேறியவர்கள் உட்பட அனைத்து புலம்பெயர்ந்த சமூகங்களுக்கும் இத் தடுப்பூசிகள் சென்றடைவது இத்திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும் என Federal சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version