Tamil News
Home செய்திகள் மட்டக்களப்பில் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைமை நியமனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு – வியாழேந்திரன் வெளிநடப்பு

மட்டக்களப்பில் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைமை நியமனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு – வியாழேந்திரன் வெளிநடப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 சதவிகிதமான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் மாவட்ட அபிவிருத்தி குழுவில் இணைத்தலைவராக ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் (திங்கட்கிழமை) காலை ஆரம்பமான நிலையில், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்று நிரூபத்திற்கு மாறாக இணைத்தலைவர் நியமனம் நடைபெறுவதாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தார்.

இதனை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே வியாழேந்திரன் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

Exit mobile version